Saravana Vikram - VJ Deepika: ரீல் ஜோடியாகத் தொடங்கி நிஜ ஜோடி? காதலை உறுதி செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸ்வர்யா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா கதாபாத்திரங்களில் நடிக்கும் சரவண விக்ரம் - விஜே தீபிகா ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையப் போகிறார்கள் என சீரியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்!
சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் அபிமான தொலைக்காட்சி சேனல் என்றால் அது நிச்சயமாக விஜய் டிவி தான். வெரைட்டியான ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பல விறுவிறுப்பான மெகா தொடர்கள் என புதுமையான வழிகளில் சின்னத்திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஒரு தொலைக்காட்சி சேனலாகும்.
விஜய் டிவியில் ஏராளமான தொடர்கள் இருப்பினும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு கூடுதல் வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. கூட்டு குடும்பத்தின் அழகான வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், ஹேமா, சரவணா விக்ரம், விஜே தீபிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தத் தொடரில் எந்த அளவிற்கு அண்ணன் - தம்பி பாசம் ஹைலைட்டாக இருக்கிறதோ அதே அளவிற்கு கணவன் மனைவி கெமிஸ்ட்ரியும் சூப்பர் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை கதாபாத்திரங்களில் நடித்த குமரன் - விஜே சித்ரா கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருந்தது. அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அவர்களைப் போலவே கண்ணன் - ஐஸ்வர்யாவாக நடித்த சரவண விக்ரம் - விஜே தீபிகா ஜோடிக்கும் ஏராளமான பேன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடிக்கும்போது கண்ணனுக்கும் அவருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. ஐஸ்வர்யா, கண்ணனை மாமா என செல்லமாக அழைத்தது மிகவும் க்யூட்டாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இடையில் தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார். அதற்கு பிறகு கண்ணன் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தார் சாய் காயத்ரி. அதற்கு பிறகு கண்ணன் - ஐஸ்வர்யா கதாபாத்திரங்களுக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி டல்லானது.
சாய் காயத்ரியும் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதால் மீண்டும் அந்த இடத்தை கைப்பற்றினர் விஜே தீபிகா. மறுபடியும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது. இருவரும் சீரியலில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போதும் சரி, சீரியலில் இருந்து விலகிய பிறகும் சரி சோசியல் மீடியா மூலம் ஷார்ட் பிலிம், போட்டோஷூட், ஆல்பம் மூலம் ஜோடியாக நடித்து ரசிகர்களை எப்போதுமே சந்தோஷப்படுத்தி வந்தார்கள்.
சரவண விக்ரம் - விஜே தீபிகா இடையில் காதலா எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், விஜே தீபிகாவின் சோசியல் மீடியா ஸ்டோரி ஒன்று அவர்களின் கிசுகிசுவை உறுதிப்படுத்தியுள்ளது.
சரவண விக்ரம் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து 'நாம் என்றுமே ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டீல் மை டியர்' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருந்தார்.
இது அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மௌனமாகவே இருக்கும் இவர்கள் விரைவில் நல்ல செய்தி சொல்ல வேண்டும் என விரும்புகிறார்கள் அவரின் ரசிகர்கள்.