மேலும் அறிய

‛நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்...’ 21ம் ஆண்டில் 'பாண்டவர் பூமி'

'Pandavar Bhoomi Movie: இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஐந்தாவது திரைப்படம் "பாண்டவர் பூமி". 2001ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றோடு 21 ஆண்டுகளை கடந்து விட்டது.

 

அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன என்றாலும் குடும்ப கதை என்றவுடன் நம் நினைவுகளில் உடனே வருவது "பாண்டவர் பூமி" குடும்பம் தான். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றோடு 21 ஆண்டுகளை கடந்து விட்டன. காலத்தால் அழியாத இந்த படைப்பு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 

 

சேரனின் 5 வது படம்:

 

இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஐந்தாவது திரைப்படம் "பாண்டவர் பூமி". அவரின் திரை வாழ்விற்கும் படத்தின் பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம். 5 வது படம் என்பதால் 'பாண்டவர் பூமி'. ராஜ்கிரண், அருண் விஜய், ரஞ்சித், ஷமிதா, விஜயகுமார், சார்லி, மனோரமா, வினுசக்கரவர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக உருவான மற்றுமொரு திரைப்படம் இது. 

 

‛நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்...’ 21ம் ஆண்டில் 'பாண்டவர் பூமி


உறவுக்கு எடுத்துக்காட்டு:

 

அண்ணன்- தம்பி, அக்கா - தங்கை என ஒரு பெரிய குடும்பமாக கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தின் பூர்வீக வீட்டை கட்ட என்ஜினீயராக அருண் விஜய் வருகிறார். அவரின் ஆர்வம், நட்பு, காதல், பிரிவு என அனைத்து உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டி இருந்தார் நடிகர் அருண் விஜய். 

இப்படத்தில் ராஜ்கிரணின் கடைக்குட்டி தங்கையாகவும், கவிதாவின் மகளாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ஷமிதா. ராஜ்கிரண், ரஞ்சித், கவிதா, விஜயகுமார் என அனைவரின் நடிப்பும் அபாரம். அவரவரின் கதாபாத்திரங்களை வெகு சிறப்பாக கையாண்டுள்ளனர். குடும்ப பாசம் , காதல், அன்பு என படம் முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.

 

சிறந்தவர்கள் சிறப்பான படைப்பு:

 

தங்கர் பச்சனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மனதில் நிலைத்து நிற்கின்றன. படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது பரத்வாஜின் இசை மற்றும் சிநேகன் பாடல் வரிகள். குறிப்பாக தோழா தோழா... பாடல் காதுகளை குளிர வைப்பது போல் அவரவர் வாழ்க்கையில்... பாடல் கண்களை வேர்க்க வைக்கிறது என்றால் அது மிகையல்ல.


மக்களின் வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்:

  
தனது சினிமா பயணத்தை வியாபார ரீதியாக மட்டுமே பார்க்காமல் சமூக  அக்கறையோடு மக்களுக்கு ஒரு வாழ்க்கை படமாக அமைப்பதில் இயக்குனர் சேரன் ஒரு தனி ரகம். அதற்கு எடுத்துக்காட்டாக அவரின் இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து மற்றும் பல திரைப்படங்கள் அவரின் அடையாளங்களை பதித்த முத்திரைகள் என்றே சொல்லலாம் . சிறந்த இயக்குநருக்கான "பாண்டவர் பூமி" திரைப்படம் 2001 ம் ஆண்டிற்கான பிலிம் ஃபேர் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.   

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Embed widget