Pacha Elai song : ‛சிலுக்கு சிக்கான்... சிலுக்கு சிக்கான்...’ ராதிகா பாடிய பாடலை கேளுங்க!
யுவன் ஷங்கர் ராஜா இசையில் லவ் டுடே படத்தின் மூன்றாவது பாலான "பச்ச இலை" பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் நொ. 1 இடத்தை கைப்பற்றியுள்ளது.
ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "லவ் டுடே". நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான "கோமாளி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் சரியான ஒரு வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தற்போது "லவ் டுடே" எனும் படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் களமிறங்கி உள்ளார். இப்படத்தில் ராதிகா, சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகி பாபு, ஆதித்யா கதிர், சூப்பர் சிங்கர் அஜித், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மூன்றாவது பாடலும் அவுட் :
லவ் டுடே திரைப்படம் நவம்பர் 4ம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது பாடலான "பச்ச இலை" பாடல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. இப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது இணையத்தில் இந்த பாடல் தான் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
View this post on Instagram
சிலுக்கு சிக்கான் :
பச்ச இலை பாடலின் சிலுக்கு சிக்கான்... ஹம்மிங்கை படத்தின் நடிகர் நடிகைகள் சேர்ந்து ஒரு தூள் கிளப்பும் மிக்ஸிங் செய்துள்ளார்கள். இந்த லிரிகள் வீடியோ பாடலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் சோனி மியூசிக் நிறுவனம். இது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பாடல் மூலம் அனைவரையும் துள்ள செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
`
View this post on Instagram