Oscars 2024 LIVE: போட்டி போட்டு ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய படங்கள் - அப்டேட்டுகள் உடனுக்குடன்!
Oscars 2024 Live Updates: சினிமா உலகின் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பற்றிய அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்
LIVE
Background
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா வரும் இன்று நடைபெற்றது. முன்னதாக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வெற்றியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர், பார்பீ, கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன், அனாடமி ஆஃப் ஏ ஃபால், புவர் திங்ஸ், மேஸ்ட்ரோ, உள்ளிட்ட பல்வேறு படங்கள் இந்த முறை விருது வெல்லும் பட்டியலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியுள்ள ஓப்பன்ஹெய்மர் படம் மட்டும் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்கள் தவிர்த்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் விருதுக்கு தேர்வாகின. இதில் சில படங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெறாத நிலையில் இன்னும் சில படங்கள் போட்டியில் நிலைத்துள்ளன.
ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சியை ஒரு பிரபலம் தொகுத்து வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பிரபல காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் இந்த நிகழ்ச்சியை நான்காவது முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார். எந்த நடிகர், எந்தப் படம் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது விழா பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகிறது. வரும் மார்ச் 10 ஆம் தேதி மாலை 7 மணியளவில் லாஸ் எஞ்சலஸில் தொடங்க இருக்கும் ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. விருது அறிவிக்கப்படுவது தவிர்த்து விருது வென்ற கலைஞர்களின் உரையும் இதில் இடம்பெறும்.
ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை ரசிகர்கள் பார்க்கும் வகையில் பல்வேறு ஓடிடி தளங்கள் இந்தப் படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிடவை இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து ஒரு சில படங்கள் திரையரங்கங்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
Oscars 2024 LIVE: ஆஸ்கர் விருதுகளை குவித்த ஓப்பன்ஹெய்மர் - ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிப்பு
7 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ள கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் 21ம் தேதி, இந்தியாவில் ஜியோ சினிமா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது
Oscars 2024 LIVE : பத்தாவது முறையாக ஆஸ்கரை தவறவிட்ட பிராட்லி கூப்பர்!
இதுவரை 9 முறை ஆஸ்கரை தவறவிட்ட பிராட்லி கூப்பர், இந்தாண்டில் 10வது முறையாக ஆஸ்கரை தவறவிட்டுள்ளார்.
Oscars 2024 LIVE : இரண்டாவது முறை ஆஸ்கரை வென்ற எம்மா ஸ்டோன்!
முன்னதாக லா லா லேண்ட் படத்திற்காக ஆஸ்கரை வென்ற எம்மா ஸ்டோன், புவர் திங்க்ஸ் படத்திற்காக (சிறந்த நடிகை) இரண்டாவது முறை ஆஸ்கரை பெற்றுள்ளார்.
Oscars 2024 LIVE : ஆஸ்கர் விருதை அமைதியை நிலைநாட்டுபவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - சிலியன் முர்ஃபி
"நல்லதோ கெட்டதோ, நாம் அனைவரும் ஓப்பன்ஹைமர் உலகில் வாழ்கிறோம், எனவே இதை உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுபவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்." சிலியன் முர்ஃபி
Oscars 2024 LIVE: 8 முறை நாமினேஷன்.. முதல்முறையாக ஆஸ்கர் விருது வென்ற கிறிஸ்டோபர் நோலன்
ஆஸ்கர் விருதுக்கு 8 முறை நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் முதல்முறையாக ஓப்பன்ஹெய்மர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றார் கிறிஸ்டோபர் நோலன்