மேலும் அறிய

Naatu Naatu Oscar Awards 2023: அடி தூள்... சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது “நாட்டு நாட்டு” பாடல்...!

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கைப்பற்றியுள்ளது. 

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கைப்பற்றியுள்ளது. 

உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. 

அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற  நாட்டு நாட்டு பாடலும், ஆவணப்படம் பிரிவில்  The Elephant Whisperers படமும், Documentary Feature Film பிரிவில் All That Breathes படமும் போட்டியிட்டது. 

இதில் All That Breathes படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சிறந்த பாடலுக்கான பிரிவில்  நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர். 

முன்னதாக இப்பாடல் விழா மேடையில் நடன கலைஞர்களால் நிகழ்த்தி காட்டப்பட்டது. பாடல் முடிந்தவுடன் விழாவிற்கு வந்த அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விருதைப் பெற்றதும் மேடையில் பேசிய கீரவாணி, ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி கூறினார். மேலும் கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இந்த வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஆஸ்கர் விருது வென்ற 2வது இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.ஆர்.ஆர். படம் 

கடந்தாண்டு இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் “நாட்டு நாட்டு” பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு
TVK Maanadu Madurai | ட்ரோன் மூலம் மருந்துகள் TVK மாநாட்டில் புது ஐடியா அசந்து போன தொண்டர்கள்! Vijay
BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
CP Radhakrishnan : ’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரக் தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Embed widget