இந்தியாவில் பிரபலமான நடிகர்கள் : முதல் இடத்தில் விஜய் ! நான்காவது இடத்தில் அஜித் ! மேலும் விபரங்கள் உள்ளே!
ஜூன் மாதத்தில் அதிகம் பிரபலமடைந்த நடிகைகள் பட்டியலில் முதலாவதாக சமந்தா இருக்கிறார்.
ORMAX மீடியா:
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ORMAX மீடியா நிறுவனம் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட படங்கள் , நடிகர் நடிகைகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தி அந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. முதல் எட்டு ஆண்டுகளாக இந்த அறிக்கைகள் ஹிந்தி திரைப்பட பார்வையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2019 முதல், ஹாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கி, 2021ல் கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்த்து ஒன்பது மொழிகளுக்கு விரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் பிரபலமான நடிகர் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பிரபலமான நடிகர்கள் :
அதிகம் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை தளபதி விஜய் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை நடிகர் பிரபாஸும் , மூன்றாவது இடத்தை ராக்கி பாய் , யாஸும் பிடித்திருக்கின்றனர். அதே போல நான்காவது இடத்தை நடிகர் அஜித்தும் , ஐந்தாவது இடத்தில் அக்ஷய் குமாரும் இடம்பெற்றுள்ளனர். அல்லு அர்ஜூன் , ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு , ராம் சரண் அடுத்தடுத்த இடங்களை பிடிக்க , பத்தாவது இடத்தை சூர்யா நிரப்புகிறார்..
Ormax Stars India Loves: Most popular male film stars in India (June 2022) #OrmaxSIL
— Ormax Media (@OrmaxMedia) June 22, 2022
For last month's results and methodology, visit: https://t.co/pqKpTTgogB pic.twitter.com/fl62ijEb9A
பிரபலமான நடிகைகள் :
ஜூன் மாதத்தில் அதிகம் பிரபலமடைந்த நடிகைகள் பட்டியலில் முதலாவதாக சமந்தா இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆல்யா பட்டும் மூன்றாவது இடத்தில் நயன்தாராவும் உள்ளனர். தீபிகா படுகோன் , காஜல் அகர்வால் , கீர்த்தி சுரேஷ் , கத்ரினா கைஃப் , சாய் பல்லவி , பூஜா ஹெக்டே ,அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றனர்.
Ormax Stars India Loves: Most popular female film stars in India (June 2022) #OrmaxSIL
— Ormax Media (@OrmaxMedia) June 22, 2022
For last month's results and methodology, visit: https://t.co/pqKpTTgogB pic.twitter.com/JMmhUob6hO
அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்கள் பட்டியல் :
டிரைலர் வெளியாகவில்லை என்றாலும் கூட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழ் படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. முதலில் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், இரண்டாவது கோப்ரா, மூன்றாவது வட சென்னை இரண்டாம் பாகம் , நான்காவது துருவ நட்சத்திரம் , ஐந்தாவது வாடிவாசல் .
#OrmaxCinematix Most-awaited Tamil films, as on Jun 15, 2022 (only films releasing Aug 2022 onwards whose trailer has not released yet have been considered) pic.twitter.com/qBz4GZ9Qss
— Ormax Media (@OrmaxMedia) June 20, 2022