Leo : பழைய பாடல்களுக்கு விஜயை Vibe செய்யவிட்ட லோகேஷ்.. லியோ படத்தில் இடம்பெற்ற 90ஸ் பாடல்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் இடம்பெற்ற பழைய பாடல்கள் என்ன தெரியுமா?
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத் , மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசைமைத்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
பாட்டு பழசு சீன் புதுசு
லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் பழைய பாடல்களுக்கு ஒர் தனித்துவமான இடம் உண்டு. இந்தப் பாடல்களை படத்தின் முக்கியமான காட்சிகளில் அந்த காட்சியை வித்தியாசமாக மாற்றும் வகையில் பயன்படுத்தியிருப்பார் லோகேஷ். அவரது முந்தைய படங்களில் இருந்தது போலவே லியோ படத்திலும் பழைய பாடல்கள் இருக்குமா என்று ரசிகர் ஒருவர் முன்னதாக கேட்டிருந்தபோது அதற்கு நிச்சயமாக இருக்கும் என்று லோகேஷ் பதிலளித்திருந்தார். தற்போது லியோ படம் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தில் இரண்டும் 90-களில் வெளியான படங்களின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
லோகேஷ் படங்களில் இடம்பெற்ற பாடல்கள்
முன்னதாக லோக்கி இயக்கிய கைதி திரைப்படத்தில் மிக சீரியஸான காட்சி ஒன்றில் 1999-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’என் சுவாசக் காற்றே’ என்கிற படத்தில் இடம்பெற்ற ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடல் இடம்பெற்றிருந்தது. அதே கைதி படத்தில் மற்றுமொரு சீரியஸான காட்சியில் வில்லனான அர்ஜுன் தாஸ் டெரராக நிற்க ஜார்ஜ் குட்டி பீதியுடன் நிற்கையில் ஆசை அதிகம் வெச்சு என்கிற பாடலை சேர்த்து அந்த காட்சியின் ஃப்ளேவரை மாற்றியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.
மாஸ்டர்
மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனனை வில்லன் துரத்திச் செல்ல அவர் ஓடி ஒரு சலூன் கடையில் ஒளிந்துகொள்வார். அப்போது அந்த சலூன் கடையில் டிவியில் புது நெல்லு புது நாத்து படத்தில் இருக்கும் கருத்த மச்சான் படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருக்கும்
விக்ரம்
விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் போருக்கு தயாராவதுபோல் துப்பாக்கிகளை வைத்து நிற்க, அவருக்கு மாஸாக அனிருத் பி.ஜி.எம் போட காத்திருக்கிறார். ஆனால் அவரை அப்படியே நிறுத்திவிட்டு அந்த சீனில் 1995-இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் லோகேஷுக்கு பிடித்த நடிகரான மன்சூர் அலிகான் ஆடிய பாடலான சக்கு சக்கு வத்திக்குச்சி என்கிற பாடலை பேக் கிரவுண்டில் சேர்த்திருக்கிறார் லோகேஷ்.
லியோவில் என்ன பாடல்
1995-ஆம் ஆண்டு பிரபு சரண்யா பொண்வண்ணன் நடிப்பில் வெளியான பசும்பொன் திரைப்படத்தில் இருந்து தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடலை லியோ படத்தில் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். வித்யாசாகர் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.
கரு கரு கருப்பாயி
2000 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்து வெளியான ஏழையின் சிரிப்பில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி பாடல் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலுக்கு தேவா இசைமைத்திருக்கிறார்.