Pathu Thala look : ”வருத்தம்தான்; சிம்புவும் கௌதம் மேனனும் எனக்கு நெருக்கம்” - மனம் திறந்த பத்து தல இயக்குநர்
பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் லுக் குறித்து வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஒபிலி. என். கிருஷ்ணா
நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமான இயக்குநர் ஒபிலி. என். கிருஷ்ணா தற்போது நடிகர் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'பத்து தல'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவனி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
முஃப்தி படத்தின் ரீ மேக் :
2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் ரீ மேக் தான் பத்து தல திரைப்படம். இதில் நடிகர் சிம்பு ஒரு கேங்ஸ்டராக ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஹீரோ லுக் லீலாக்கானது :
'பத்து தல' திரைப்படத்தின் இயக்குநர் ஒபிலி.என். கிருஷ்ணா சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் மிகுந்த வருத்தத்துடன் ஒரு சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சிம்பு நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் . கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படத்தில் சிம்புவின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் புதிதாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டது. அந்த காட்சிகளில் நடிகர் சிம்பு நீண்ட தலைமுடி தாடியுடன் 5 நிமிட காட்சியில் நடித்திருந்தார்.
வருத்தமாக இருந்தது :
சிம்புவின் அந்த கெட்அப் 'பத்து தல' திரைப்படத்திற்கானது என்றும் அந்த கெட்டப்பில் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்ததில் சற்று வருத்தம் இருப்பதாக தெரிவித்துள்ளார் பத்து தல படத்தின் இயக்குனர் கிருஷ்ணா. ஒரு படத்தின் மிகவும் பெரிய புரமோஷனாக கருதப்படுவது ஹீரோவின் லுக் தான். ஆனால் அந்த கெட்டப்பில் சிம்பு ஏற்கனவே பத்து தல திரைப்படத்தில் தோன்றி விட்டார் என்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கௌதம் மேனன் மற்றும் சிம்பு இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்கள் கேட்கும் போது முடியாது என மறுக்க முடியவில்லை. இருப்பினும் பத்து தல படத்தில் சிம்புவின் லுக்கை வெந்து தணிந்தது காடு படத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.