Producer Ravindar: அன்புதாங்க எல்லாம்...‘கிளப் ஹவுஸ்’ பண மோசடி புகார்.. இன்ஸ்டா பதிவில் பதில் சொன்ன ரவீந்தர்!
Producer Ravindar: அன்புதாங்க எல்லாம்...‘கிளப் ஹவுஸ்’ பண மோசடி புகார்.. இன்ஸ்டா பதிவில் பதில் சொன்ன ரவீந்தர்!
பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாலட்சுமியுடன் திருமணம்
லிப்ரா புரொடக்ஷன் எனும் நிறுவனத்தின் கீழ் திரைப்படங்களைத் தயாரித்தும், ஃபேட் மேன் எனும் பெயரில் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வீடியோக்கள் பகிர்ந்தும் எப்போதும் லைம்லைட்டில் இருந்து வருபவர் ரவீந்தர்.
முன்னதாக பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் ரவீந்தர் செய்துகொண்டது பேசுபொருளாகி ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் கப்பிளாக விளங்கி வந்தனர்.
மகாலட்சுமி ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவரும் இணையத்தில் கடும் ட்ரோல்களுக்கும் உருவக்கேலுக்கும் ஆளாகினர். விவாகரத்து வதந்திகள் வரை இவர்கள் பற்றி தகவல்கள் தீயாய் பரவிய நிலையில், இருவரும் சென்ற மாதம் தான் இத்தகைய தகவல்கள் போலியானவை எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.
பண மோசடி புகார்
இந்நிலையில், தற்போது ரவீந்தர் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. கிளப் ஹவுஸ் செயலியில் பழகி தன்னிடம் ரவீந்தர் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ஆன்லைன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், சென்ற ஆண்டு மே 8ஆம் தேதி ரவீந்தர் தன்னிடம் 20 லட்ச ரூபாய் பெற்றதாகவும், தொடர்ந்து மே 25ஆம் தேதி பணத்தை மீண்டும் தருவதாக சொன்ன ரவீந்தர் பணத்தைத் தராமல் தன்னை அவதூறாகப் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் செல்ஃபோன் நம்பரை ரவீந்தர் பிளாக் செய்துவிட்டதாகவும், தன் பணத்தை மீட்டுத்தரக் கோரியும் விஜய் ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் ரவீந்தர் தன் மனைவி பற்றி ஆபாசமாகப் பேசியதாகவும் கூறி, தன் புகார் உடன் ஆடியோ ஒன்றையும் விஜய் எனும் அந்நபர் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இன்ஸ்டாவில் பதில்
இந்நிலையில், இந்தப் புகார் பற்றி பேசியுள்ள ரவீந்தர் தரப்பு, தாங்கள் பணம் தர ஒப்புக் கொண்ட நிலையில், விஜய் புகாரை வாபஸ் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ”நம்மை வெறுப்பவர்களால் நாம் சூழப்பட்டிருக்கும் நேரத்தில், அன்பைப் பகிர்ந்து , அன்பு இருப்பதை நிரூபிப்போம்” எனும் கேப்ஷனுடன் ஃபோட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில் இவரது பதிவில் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.