Nithya Menon : தனி வெற்றி இல்ல.. எங்க நாலு பேருக்குமானது - நித்யா மேனன் நெகிழ்ச்சி
Nithya Menon : நடிகை நித்யா மேனன் "திருச்சிற்றம்பலம்" படத்திற்காக கிடைத்த சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அந்த வெற்றிக்கு நன்றி சொல்லி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
திரையுலகில் சிறந்து விலங்கு கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருது தேசிய விருது. 70வது தேசிய விருது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்று பல தேசிய விருதுகளை குவித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம். சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்றது.
மேலும் இரு தேசிய விருதுகளுக்கு தேர்வாகி உள்ளது 2022ம் ஆண்டு தனுஷின் இயக்கத்தில் வெளியான 'திருச்சிற்றம்பம்' திரைப்படம். சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன இயக்குநருக்கான விருது என இரு பிரிவுகளின் கீழ் விருதுளை பெற்றுள்ளது தனுஷின் "திருச்சிற்றம்பலம்" திரைப்படம்.
அந்த வகையில் சிறந்த நடிகைக்கான விருதை "திருச்சிற்றம்பலம்" படத்திற்காக நடிகை நித்யா மேனன் பெற்றுள்ளார். அதே போல அனிருத் இசையில் அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. அதிலும் 'மேகம் கருக்காதா...' பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு சிறந்த நடன இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.
தனக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்ததற்கு நித்யா மேனன் நன்றி கூறும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. எனக்கு விருது கிடைத்துள்ளது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. "திருச்சிற்றம்பலம்" மாதிரி பிடிச்ச ஒரு படம். அந்த படத்தில் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க எனக்கு முதல் தடவையா ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இந்த விருதை வென்றது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு என் சொல்ல முடியாது. அது இரு குழுவின் உழைப்பு. மிக முக்கியமாக என்னுடைய ஃபேவரட் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் சார். இந்த படத்துக்கு எந்த ஒரு விருது வந்தாலும் அதை நாங்கள் நால்வரும் பகிர்ந்து கொள்வோம்.
தனுஷ் படத்தில் நடித்ததுக்கு எனக்கு இந்த விருது கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என பேசி இருந்தார் நடிகை நித்யா மேனன். அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் தனுஷ், நித்யா மேனனை பாராட்டி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நித்யா மேனன் விருது பெற்றதில் தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டு இருந்தார். அதே போல அந்த படத்துக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் மாஸ்டருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.