Vijay Sangeetha: #Justiceforsangeetha..! சேர்ந்து பயணித்த விஜய் - த்ரிஷா, கூடி அடிக்கும் திமுக, நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
Vijay Sangeetha: விஜய் மற்றும் த்ரிஷாவை இணைத்து பேசி இணையவாசிகள் சங்கீதாவிற்கு நியாயம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Vijay Sangeetha: தவெக தலைவர் விஜையை கடுமையாக சாடி, Justiceforsangeetha என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்:
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கும், அவரது நீண்ட நாள் காதலருக்கும் அண்மையில் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதுதான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், Justiceforsangeetha என்ற ஹேஷ்டேக்கும் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரச்னை என்ன?
விஜய் - த்ரிஷா தொடர்பான கிசுகிசுக்கள் பல ஆண்டுகளாகவே கோடம்பாக்கத்தில் வலம் வந்தபடி உள்ளன. ஆனாலும், இதை பற்றி எங்குமே அவர்கள் வெளிப்படையாக பேசியதில்லை. கிசுகிசுக்களை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகவே திரைப்படங்களில் சேர்ந்து நடிப்பதையும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தான் லியோ படத்தின் மூலம் அந்த ஜோடி திரையில் மீண்டும் இணைந்தது. அதைதொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக விஜய் - சங்கீதா இடையேயான திருமண உறவு சரியாக இல்லை என கூறப்படுகிறது. இது வதந்தி என கூறப்பட்டாலும், அண்மை காலமாக சங்கீதா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக பொதுவெளியில் எங்கும் காணப்படவில்லை. இத்தகைய சூழலில் தான், கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமண விழாவிற்கு, ஒரே விமானத்தில் விஜய் மற்றும் த்ரிஷா பயணித்துள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளுத்து வாங்கும் திமுக
விஜய் மற்றும் த்ரிஷா ஒரே விமானத்தில் பயணித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளன. அதனை பகிர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியவில்லை. ஆனால், சக நடிகையின் திருமணம் என்றவுடன் தனி விமானம் பிடித்து உங்களால் கோவா செல்ல முடிகிறதா என திமுகவினர் களமாடி வருகின்றனர். மேலும், தனிமனித ஒழுக்கம் இல்லாத விஜய் திமுகவை ஒழிக்க வந்துவிட்டாராம் எனவும், இன்னும் அவர் நடிகராக மட்டுமே தொடர்கிறார் என்றும் சாடி வருகின்றனர். களத்தில் இறங்க தயாராக இல்லாத அரசியல்வாதி நடிகர் தான் விஜய் எனவும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
கூடி அடிக்கும் நெட்டிசன்கள்:
அரசியல்வாதி விஜய் என்பதை தாண்டி, நடிகர் விஜயை தாக்க ஒரு பெரும் கூட்டம் சமூக வலைதளத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் விஜய் மற்றும் த்ரிஷா சேர்ந்து பயணித்தது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து, Justiceforsangeetha என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் தேசிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சிலர் மிகவும் மோசமான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், சேர்ந்து ஒரே விமானத்தில் பயணித்தது குற்றமா என விஜய் ரசிகர்கள் மறுமுனையில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
வேலையை பார்க்கலாமா?
விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான உறவு என்பது உண்மையா என எந்தவித ஆதாரப்பூர்வ தகவலும் இல்லை. இந்த விவகாரம் சமூகத்தில் எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும், விஜய் எனும் தனிநபரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையையே பெரிதும் பாதிக்கும். அதை சற்றும் உணரமால், சினிமா பிரபலங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும், ரசிகர்கள் எனும் பெயரில் சமூக வலைதளங்களில் தங்களையே தாழ்த்திக் கொண்டு கருத்து பதிவிடுவதன் பலன் என்ன என்பதை யாரும் உணர்ந்தாய் இல்லை. தனிமனித தாக்குதல் என்பது யார் யாரை நோக்கி செய்தாலும் தவறு தான். அண்மையில் நடிகர் அஜித் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டு இருந்தார். இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிநபருக்கும் பொருந்தும் என்பதே உண்மை.