Leo: கோட்சூட் கூட மாறல... ஹாலிவுட் பட போஸ்டர்களின் காப்பியா... லியோ பட போஸ்டர்களை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
லியோ படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாகக் கூறி வருகிறார்கள் இணையவாசிகள்.
லியோ படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட் படத்தின் போஸ்டர்களைப் பார்த்து இன்ஸ்பையராகி டிசைன் செய்யப்பட்டவையா என்கிற விவாதம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லியோ’. அனிருத் இசையமைத்திருக்கும் லியோ படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் லியோ படம் குறித்த அப்டேட்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறது படக்குழு. ஏற்கெனவே படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழி வெளியீட்டிற்கான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், இன்று இந்தப் படத்தின் இந்தி போஸ்டர் ஒன்றும் வெளியாக இருக்கிறது.
போஸ்டர் காப்பியா
முன்னதாக ‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் “அமைதியாக இருந்து யுத்தத்தை தவிர்” என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டரில் முற்றிலும் புதிய லுக்கில் நடிகர் விஜய் பனியில் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
KEEP CALM AND AVOID THE BATTLE
— Seven Screen Studio (@7screenstudio) September 17, 2023
Watch out.. #LeoPosterFeast will unveil stories, one poster at a time 😁
Aatalu paatalu tho mee #Leo Telugu lo release avthundhi 🔥#LeoTeluguPoster #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay… pic.twitter.com/ryXr9ufWs8
இதனைத் தொடர்ந்து கன்னட போஸ்டரில் ஒரு ரிவால்வர் துப்பாக்கியில் விஜய்யின் உருவம் இடம்பெற்றிருந்தது. “அமைதியாக இருந்து தப்பிக்க திட்டமிட்டு” என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு போஸ்டர்களும் படத்தின் கதை என்ன மாதிரியானதாக இருக்கும் என்கிற பல வித யூகங்களை கிளப்பியிருந்த நிலையில், இந்த போஸ்டர்கள் ஒரு சில ஹாலிவுட் மற்றும் தமிழ் படங்களின் போஸ்டர்களை ஒத்து இருப்பதாக இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.
Keep calm and plot your escape#LeoKannadaPoster#LEO 🔥🧊 pic.twitter.com/EsfFcTml4t
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2023
தெலுங்கு போஸ்டர் ஹாலிவுட் நடிகர் லையம் நீசன் நடித்த கோல்டு பெர்ஷுர் என்கிற படத்தின் போஸ்டரை ஒத்திருப்பதாகவும், கன்னட போஸ்டர் ஆயுதம் என்கிற தமிழ் படத்தை ஒத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாக இருந்த லியோ படத்தின் இந்தி போஸ்டர் நடிகர் விஜய் ஆண்டனி மகளின் மறைவின் காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று வெளியாக இருக்கும் இந்தி மொழிக்கான போஸ்டரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
KEEP CALM AND PLOT YOUR ESCAPE
— Seven Screen Studio (@7screenstudio) September 18, 2023
Watch this space, #LeoPosterFeast will unveil stories, one poster at a time 😁
Kannadadalli #Leo bharjari release 🔥#LeoKannadaPoster#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial… pic.twitter.com/BEZoDzJBSB
மேலும் படிக்க : TN Assembly: அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு