Neelima Rani : ஒன்னா வாழ்ந்தா கிரிஞ்சா! பேலன்ஸ் முக்கியம்... நீலிமா கொடுத்த மேரேஜ் அட்வைஸ்
Neelima Rani : கணவன் மனைவிக்குள் வயது வித்தியாசம் இருந்தாதான் லைஃப் பேலன்ஸ்ல இருக்கும் - நடிகை நீலிமா
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவரும் வெள்ளித்திரையில் அவ்வப்போது துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவரின் கணவர் குறித்தும் திருமணம் குறித்தும் தன்னுடைய கருத்தையும் தெரிவித்து இருந்தார்.
நீலிமா ராணி தன்னை விட 10 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை 21 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் குறித்து நீலிமா பேசுகையில் "அவரை எனக்கு கடந்த 20 வருடங்களாக தெரியும். என்னுடைய நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்தையுமே எனக்கு கற்றுக்கொடுத்தவர் அவர்தான். என்னை யாராவது உத்வேகமாக நினைத்து முன்னேற நினைக்கிறார்கள் என்றால் அதை விட 10 ஆயிரம் மடங்கு நான் அவரை பார்த்து கற்றுக்கொண்டதுதான்.
எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த புரிதலுக்கான முக்கியமான காரணம் எங்களுக்கு இடையே இருக்கும் வயது வித்தியாசம்தான். 10 வயது வித்தியாசம் இருந்தால் வயதில் மூத்தவர் இப்படி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்த வயது வித்தியாசம் இருப்பதால் ஒருவர் மெச்சூர்டா இருப்பாங்க ஒருவர் அரைகுறையா இருப்பாங்க. அப்படி இருக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையில் பேலன்ஸ் நன்றாக ஒர்க் அவுட் ஆகும்.
இரண்டு பேருமே மெச்சூர்டா இருந்தால் வாழ்க்கை சொதப்பலாக போய்விடும். அதே நேரத்தில் இருவருமே மெச்சூர்டா இல்லை என்றாலும் சொதப்பலாகத்தான் முடியும். அதனால கண்டிப்பா கணவன் மனைவிக்குள் வயது வித்தியாசம் இருக்கணும்” என்றார்.
இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து ஒருவருடன் வாழ்வது என்பதை கிரிஞ்ச் என்கிறார்கள். ஒருவருடன் பழகுகிறார்கள் அதுவே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால் உடனே பிரிந்துவிடுகிறார்கள். தற்போதைய சூழலில் இது தவறானதாக பார்க்கப்படுவதில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. ஆனால் உண்மையில் இது தவறான விஷயம். என்னுடைய அம்மா அம்மாவுக்கு கூட ஏராளமான பிரச்னை இருந்தது.
நானே பல முறை அம்மாவிடம் அப்பாவை விட்டுவிட்டு வர சொல்லி இருக்கிறேன். ஆனால் அப்பா கடைசி மூச்சு உள்ள வரை அம்மா அவரை இறுக்க பிடித்து இழுத்துக்கொண்டேதான் வந்தார். அம்மா செய்ததுதான் சரி என்பது எனக்கு அப்பா இறந்து 17 ஆண்டுகளுக்கு பிறகுதான் புரிகிறது.
தன்னுடைய திரை வாழ்க்கை குறித்து பேசுகையில், வாய்ப்புகளை யாரிடமும் இருந்து பிடுங்க முடியாது. அதுவாக நம்மை தேடி வரும். அப்படி வரும்போது அதில் நம்முடைய 100 சதவீத உழைப்பையும் ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். நமக்கு வரவேண்டிய வாய்ப்பு என்றால் அது நிச்சயம் நம்மை தேடி வரும். அப்படி எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்புதான் 'நான் மகான் அல்ல' திரைப்படம்.
அந்த படத்தில் நான் நடித்த சுதா கதாபாத்திரம் போல நல்ல ஒரு கேரக்டர் அமையவே இல்லை என தெரிவித்து இருந்தார் நீலிமா.