மேலும் அறிய

Nayanthara: தாதா சாகேப் பால்கே விருதுடன் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்; வைரலாகும் புகைப்படங்கள்

Dadasaheb PhalkeAwards 2024: மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று அதாவது பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது.

மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் மஞ்சள் நிற சேலையில் வருகை தந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜவான் படத்துக்காக தாதாசாகேப் விருதினைப் பெற்றுள்ள நடிகை நயன்தாராவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Nayanthara: தாதா சாகேப் பால்கே விருதுடன் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்; வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் பெற்றுக்கொண்ட தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி வழங்கி வருகின்றனர். குறிப்பாக நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், ”ரொம்ப பிரிட்டி” என கமெண்ட் செய்துள்ளார். 

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதினைப் பெற்ற நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் கருதுகின்றேன்” என தெரிவித்துள்ளார். 

Nayanthara: தாதா சாகேப் பால்கே விருதுடன் கெத்து காட்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்; வைரலாகும் புகைப்படங்கள்

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ, இந்தியில் இயக்குநராக ஜவான் படத்தில் அறிமுகமானார். ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, சஞ்சய் தத், பிரியாமணி , சஞ்சீதா பட்டாசார்யா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த ஜவான் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 

View this post on Instagram
 
A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக திரையரங்கங்கத்தில் வெளியான ஜவான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கதையில் பல படங்களை வழக்கம் போல கலந்து கட்டி அடித்திருந்தார் அட்லீ. ஆனால் இப்படத்தை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடினர். ஜவான் திரைப்படம் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனைப் படைத்ததாக  ரெட் சில்லி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  வெறும் 17 நாட்களில் 1000 கோடி இலக்கை எட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Embed widget