Nayanthara Vs Dhanush: தனுஷை பழிவாங்க... இந்த லெவலுக்கு இறங்குவாரா நயன்தாரா! சிவகார்த்திகேயனை பிளான் போட்டு விரட்டிய சம்பவம்!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா... தனுஷை பழிவாங்குவதற்கு, சிவகார்த்திகேயனை அவமதித்த சம்பவம் பற்றிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் தனுஷுக்கு இடையே இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் 'நானும் ரவுடி தான்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்... முதல் காட்சியை பதிவு செய்யும் வீடியோ ஒன்றை உபயோகப்படுத்தி இருந்தனர்.
இதற்கு இந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், தன்னுடைய அனுமதி இன்றி 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகள் Nayanthara : Beyond the Fairytale என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றதாக கூறி ரூ.10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்க்கு நயன்தாராவும் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் தனுஷை அண்ணன் மற்றும் தந்தை தயவால் வளர்ந்தவர் என சில காட்டமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார்.

பின்னர் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இது தொடர்பான பிரச்னையும் முடிவுக்கு வந்தது. நயன் - தனுஷ் விஷயம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தித்தில் தான் இருவரும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அங்கு தான் நயன்தாரா... பக்காவாக ஸ்கெச் போட்டு தனுஷை பழிவாங்க சிவகார்திகேயனை அவமதித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் நடிகர் தனுஷும் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு முன் வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் நயன்தாராவுக்கு பின் வரிசையில் தான் சீட் ஒதுக்கப்பட்டதாம். திருமணத்திற்கு வந்ததும், அங்கு தனுஷ் அமர்ந்திருப்பதை பார்த்த நயன்தாரா பி ஆர் டீமிடம் கூறி, சிவகார்த்திகேயன் அமர்ந்திருக்கும் இடம் தனக்கு வேண்டும். அவரை வேறு ஒரு இடத்தில் மாறி அமர சொல்லுங்கள் என கூறினாராம். ஆனால் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர் என்பதால், இதை அவரிடம் சொல்ல PR டீம் சங்கடமாக பீல் பண்ணிய நிலையில், அவரை கிப்ட் கொடுக்க மேடைக்கு அழைத்து செல்லுங்கள் என நயன்தாராவே அவரை எழுந்திரிக்க வைக்க ஐடியாவும் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மேடைக்கு செல்லும் கேப்பில் , தனுஷ் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் கால் மேல கால் போட்டு அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டு ரொம்ப திமிரா அமர்ந்து தனுஷை பழிவாங்கியது போல் மனதிற்கும் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டாராம். எனினும் தனுஷ பழிவாங்க சிவகார்த்திகேயனை அவர் அவமதித்ததாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.





















