மேலும் அறிய

இந்தியில் ரீமேக்காகும் ராக்கி; மகிழ்ச்சியில் நயன் விக்னேஷ் சிவன் ஹேப்பி நியூஸ்..

ராக்கி படத்தின் ஓடிடி உரிமை மூலம் வருமானத்தை எதிர்பார்த்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட ராக்கி திரைப்படத்திற்கு இந்தி ரீமேக் உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

 தமிழ்சினிமாவில் நடிகர்களுக்கு இணையான நடிப்புத்திறனையும், பாராட்டுதலையும் பெற்றுள்ள நடிகை தான் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா. குறிப்பாக தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 களில் தான் கதாநாயகிகள் நிலைத்து நிற்பதைப்பார்த்திருப்போம். ஆனால் இந்த மனநிலையை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு பல ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பின் மூலம் நிலைத்து நிற்கிறார் நடிகை நயன்தாரா. இவ்வாறு பல படங்களில் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை, விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல்வேறு படங்களையும் தயாரித்துவருகிறார்.

இந்தியில் ரீமேக்காகும் ராக்கி; மகிழ்ச்சியில் நயன் விக்னேஷ் சிவன் ஹேப்பி நியூஸ்..

 நயன்தாரா, விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்திவரும் தயாரிப்பு நிறுவனம் தான் ரவுடி பிக்சர்ஸ். இந்நிறுவனத்தின் மூலம் நெற்றிக்கண் போன்ற படங்களை தயாரித்துள்ளது. தற்போது ரவுடி பிக்சர்ஸ் ஊர்க்குருவி என்ற படத்தை தயாரித்துவருகிறது. இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பாக தரமணி வசந்த ரவி நாயகனாக நடிக்கும் ராக்கி படத்தின் ஒட்டு மொத்த உரிமையை வாங்கினர். பாரதி ராஜாவும் நடித்திருக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்தப்படமானது பல ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் படம் மல்டிபிளக்ஸ்களில் மட்டும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து விமர்சனரீதியாகவும் படத்தை பலரும் பாராட்டினாலம், வசூல்ரீதியாக திருப்தி இல்லாமல் இருந்தது.

இதனையடுத்து ராக்கி படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  முயற்சிகள் எடுத்தும் பலனில்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் ராக்கி படத்தின் ஓடிடி உரிமை மூலம் வருமானத்தை எதிர்பார்த்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை WAKAOO ஃபிலிம்ஸ்  வாங்கியுள்ளநிலையில், விரைவில் ராக்கி ஓடிடியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதேபோல் வாங்கிய இன்னொரு திரைப்படம் கூழாங்கல். சர்வதேச அளவில் இப்படம் பல விருதுகள் பெற்றது. ஆஸ்கார் போட்டியிலும் கூழாங்கல் கலந்து கொண்டாலும் இன்று வரை அதனை திரையரங்கில் வெளியிடாமல் வைத்துள்ளனர். கூழாங்கல்லுக்கு ரவுடி பிக்சர்ஸ் எப்போது விடுதலை அளிக்கும் என தெரியவில்லை.

  • இந்தியில் ரீமேக்காகும் ராக்கி; மகிழ்ச்சியில் நயன் விக்னேஷ் சிவன் ஹேப்பி நியூஸ்..

ராக்கி படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படம் திரைக்கு வெளிவே வருவதற்கு முன்னதாக செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் என்ற படத்தை எடுத்திருந்தார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget