Nawazuddin Siddiqui Haddi: இது வேற லெவல்...! திருநங்கை கதாபாத்திரத்தில் பேட்ட வில்லன்..! வாவ் சொல்லும் ரசிகர்கள்..
’கேங்ஸ் ஆஃப் வஸேபூர்’, ’த லஞ்ச் பாக்ஸ்’, ’மாண்டோ’ உள்ளிட்ட படங்கள் தொடங்கி ’சேக்ரட் கேம்ஸ்’ சீரிஸ் வரை கலக்கி, நடிப்பு அசுரனாக உருவெடுத்தார் நவாசுதீன்.
பாலிவுட் சினிமாவில் துணை கதாப்பாத்திரமாக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி தன் தனித்துவமான நடிப்பால் கவனமீர்த்து பாலிவுட் தாண்டி இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளவர் நடிகர் நவாசுதீன் சித்திக். ’கேங்ஸ் ஆஃப் வஸேபூர்’, ’த லஞ்ச் பாக்ஸ்’, ’மாண்டோ’ உள்ளிட்ட படங்கள் தொடங்கி ’சேக்ரட் கேம்ஸ்’ சீரிஸ் வரை கலக்கி, நடிப்பு அசுரனாக உருவெடுத்த நவாசுதீன், ‘பேட்ட’ படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக கோலிவுட்டிலும் அறிமுகமானார்.
திருநங்கை கதாபாத்திரத்தில் நவாசுதீன்:
தற்போது அக்ஷத் அஜய் சர்மா இயக்கும் ‘ஹட்டி’ எனும் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நவாசுதீன் நடித்து வருகிறார். இப்படத்துக்காக கடுமையாக உழைத்து வரும் நவாசுதீன், தனது திருநங்கை கெட் அப்பை முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இணையத்தில் கவனமீர்த்தது.
இந்நிலையில் தற்போது நவாசுதீன் ’ஹட்டி’ படத்தின் மற்றுமொரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திருநங்கை கதாபாத்திரத்தில் இந்தப் புகைப்படத்தில் இன்னும் அட்டகாசமாய் நவாசுதீன் தோற்றமளிக்கும் நிலையில், நவாசுதீனால் செய்ய முடியாத கதாபாத்திரம் என ஒன்று உள்ளதா எனக் குறிப்ப்ட்டு அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
View this post on Instagram
இறுதியாக நவாசுதீன் ‘ஹீரோபன்தி 2’, சீரியஸ் மென் ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ajithkumar: "நோ கட்ஸ் நோ குளோரி.." உலக பயணத்தின் முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த அஜித்...! ரசிகர்கள் கொண்டாட்டம்..!