மேலும் அறிய

Maamanithan : விஜய் சேதுபதியை பாராட்டிய தேசிய விருதுபெற்ற இயக்குநர் அகத்தியன்...!

இந்திய இயக்குனரான அகத்தியன் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான மாமனிதன் திரைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது அதை பார்த்த பின்பு அதில் தனக்கே உரிய இயல்பான நடிப்பில் நடித்து அசத்தி இருந்த விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாமனிதன் அந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் தான் மாமனிதன், தற்போது அந்த திரைப்படம் ஆஹா இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த திரைப்படத்தை பார்த்த தமிழில் முதன்முதலில் காதல் கோட்டை திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியன் அவர்கள் விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பை பார்த்து அவரை பாராட்டியுள்ளார்.

ஓடிடியில் வெற்றியை பெற்றிருக்கும் மாமனிதன் திரைப்படம் திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரி குவித்து வருகிறது. 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர். ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை முளைத்த நிலையில், நீண்ட நாட்களாக இந்தப்படம் கிடப்பிலேயே இருந்தது. 

அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார். அப்படி இப்படியுமாக இந்தப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தக்கூட்டணியில் வெளியான ‘தர்மதுரை’ படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,இந்தப்படத்தின் மீது அதே மாதிரியான எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வந்தனர். 

ஓடிடியில் மெகா ஹிட்

படம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்த போதினும், கதையின் ப்ளாட் அதரபழையதாக இருந்த காரணத்தால்  படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. விளைவு படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். அதனால் தியேட்டரில் படுதோல்வியை சந்தித்து ரேஸில் இருந்து வெளியேறியது மாமனிதன். அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளம் மாமனிதன் படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் காலை வாரிய  ‘மாமனிதன்’ ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ஆஹா குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக்கொண்டாடியது.

தொடர்ந்து பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ அங்கும் பல விருதுகளை வென்று வருகிறது. அதன்படி  டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்ற மாமனிதன், தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் வென்றது.

அகத்தியன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்த நிம்மதி கிடைத்தது அதில் நடித்திருந்த அனைவரும் நன்றாக நடித்திருந்தனர் என்ற பதிவை வெளியிட்டு இருந்தார். அதை ரீட்வீட் செய்த விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget