Naai Sekar Returns song: வெளியானது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் "வைகைப்புயல்" பாடிய பாடல்...
வைகைப்புயல் வடிவேலு பாடிய பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியானது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். வடிவேலு கலக்கலாக நடனமாடியுள்ளார்.
![Naai Sekar Returns song: வெளியானது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் Naai Sekar Returns song Vaikaipuyal Sung a Song choreographed by prabudeva master Naai Sekar Returns song: வெளியானது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/7915b6820d69b3b2f8c288e7031e91761668434017468588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் ஆரம்பித்துவிட்டார்.
2017ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு மீண்டும் தனது ரீ என்ட்ரி மூலம் ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்க தயாராகிவிட்டார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.
பாடல் வெளியீடு
இந்தப் படத்தின் முதல் பாடல் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது. திங்க் மியூசிக் இந்தியா யூ-டியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் "எங்க அப்பத்தா" எனத் தொடங்குகிறது. பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார்.
இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை துரை, அசல் கோலர் எழுதியுள்ளனர்.
இந்தப் பாடலுக்கு பிரபல நடன கலைஞர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். காமெடியான டான்ஸ் மூவ்ஸ் கொடுத்து வடிவேலு நடனமாடியுள்ளார். கலர்புல்லான சாங்காக இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
நான்கு பாடல்களையும் பாடியவர்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அந்த நான்கு பாடல்களையும் நடிகர் வடிவேலுவே பாடி அசத்தியுள்ளாராம். இந்த கம் பேக் வடிவேலுவுக்கு சிறப்பான நடிகராக மட்டுமின்றி சிறப்பான பாடகராகவும் ஜொலிக்கப்போகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 மற்றும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது ரிலீஸ் :
நவம்பர் மாதம் 11ம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போயுள்ளது. ஒரு முழுநீள காமெடி திரைப்படத்துக்கு ஆயுத்தமாக ரெடியாகி வருகிறார்கள் ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)