மேலும் அறிய

Bhavatharini - Yuvan: எனக்கு கைபிடிச்சு இசை சொல்லிக்கொடுத்த அக்கா! பவதாரிணி பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த யுவன்!

மறைந்த பாடகி பவதாரிணி குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து கொண்ட பழைய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

பவதாரிணி மறைவு

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி  25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை முறைக்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் அவரது சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனது 47 வயதில் உயிரிழந்துள்ளது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.

இறுதி அஞ்சலி

இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் அவரது தந்தை இளையராஜாவின் வீட்டில் அரசியல் தலைவர்கள், திரை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அவருக்கு தங்களது அஞ்சலியை நேரடியாகவும் சமூக வலைதளம் வாயிலாகவும் செலுத்தினார்கள். இந்த தருணத்தில் மிகப்பெரும் சோகத்திற்கு உள்ளாகியிருக்கும் வெங்கட்பிரபு, கங்கை அமரன் , பிரேம் ஜி, வாசுகி, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மற்றும் இளையராஜா ஆகிய குடும்பத்தினருக்கு அனைவரும் தங்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

எனக்கு இசை கற்றுக் கொடுத்தது அக்கா தான்

பவதாரிணி பற்றிய பல்வேறு நினைவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தனது குழந்தை போன்ற குரலால் பல பாடல்களுக்கு உயிர்கொடுத்த அவர், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத தடம்பதித்துச் சென்றுள்ளார். பவதாரணியுடனாக தங்களது பல நினைவுகளை திரையுலகினரும் பகிர்ந்து வருகிறார்கள். இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பேசியுள்ள பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தனது தந்தை இசைஞானி என்று போற்றப்பட்டாலும், யுவன் ஷங்கர் ராஜா இசையை முறையாக கற்றவர் இல்லை. ஆனால் கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகிய இருவரும் முறையாக இசை பயின்றவர்கள். தனக்கு சுத்தமாக இசை தெரியாது என்றும், முதல்முறையாக தன் கையைப்பிடித்து பியாவோவில் வைத்து,  தனக்கு அதை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர் தன் அக்கா பவதாரிணி தான் என்று யுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது காண்போரை உருகவைத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 நல்லடக்கம்

பவதாரிணியின் உடம் சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து  இளையராஜா தனது மகளுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget