திரையுலகில் யுவனிசம் தொடரட்டும்.. நீங்கள் பார்த்திராத Unseen போட்டோ.. அன்புடன் வாழ்த்திய மனைவி
இசையமைப்பாளர் யுவனின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

காதல் பாடல்கள் என்றால் அது யுவன் தான். சர்வமும் யுவனே, யுவன் இசை இல்லாமல் உறக்கம் ஏது என்கின்ற அளவிற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது ரசிகர்கள் அலாதி பிரியம் வைத்துள்ளனர். இளைஞர்களுக்கு பிடித்த துள்ளலான பாடல்களை கொடுத்து மதி மயங்க வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த இனிய நாளில் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யுவனுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இயக்குநர் எம்.ராஜேஷ் எஸ்எம்எஸ் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மீண்டும் யுவன், ராஜேஷ், ஜூவா கூட்டணியில் உருவாக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காம்போ இணைவதால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பழைய யுவனின் இசையை ரசிக்கவும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இசையில் யுவன் இல்லாமல் காதலே என்கின்ற அளவிற்கு இளைஞர்களின் இசை தெய்வமாக வாழ்ந்து வருகிறார். யுவன் ட்ரக்ஸ், யுவன் ராக்ஸ் என பல பெயர்களில் அவரது பாடல்கள் அனைத்தையும் கேட்டு ரசித்து வரும் ரசிகர்கள் தான் எனக்கு பெரிய கிஃப்ட் என்று அவரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவனின் மனைவி அவருக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. யுவனின் மனைவி ஜாஃப்ரூன் நிஜார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உன் ஒரு முகம் உலகமாய் காண்கிறேன். இன்று போல் என்றும் மகிழ்ச்சியான பிறந்தநாளை கொண்டாட வேண்டும். திரையுலகில் யுவனிசம் தொடர எனது வாழ்த்துகள். இதுவரை நீங்கள் பார்த்திராத unseen புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.





















