மேலும் அறிய

Vijay Political Entry: 'தமிழ்நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வாங்க’ ... விஜய்க்காக முக்கிய பிரபலம் போட்ட பதிவு..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

செய்தி வாசிப்பாளராக இருந்து சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். ஜேம்ஸ் வசந்தனின் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இணையவாசிகளிடம் இருந்து வரும். 

இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “234 தொகுதிகளிலும் 10, 12 வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்க்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வை நடத்திய விஜய், இதைவிட வெளிப்படையாக தன் அரசியல் நோக்கத்தை மக்களுக்குச் சொல்லியிருக்க முடியாது.

அந்தத் துணிவிற்கும், தெளிவிற்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவிக்காமல் இருக்கமுடியாது. அதைத் தேர்ந்தெடுத்த தளமும் அற்புதமானது. இது எத்தனை இளம் உள்ளங்களை உற்சாகப்படுத்தியிருக்கும், உத்வேகப்படுத்தியிருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது. “நீங்கள்தான் எதிர்கால வாக்காளர்கள்” என்று சொன்னதன் மூலம் இதன் பின்னணியில் இருக்கும் அவருடைய அரசியல் கணக்குகளையும் அவர் பகிரத் தயங்கவில்லை.

Vijay Political Entry: 'தமிழ்நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல வாங்க’ ... விஜய்க்காக முக்கிய பிரபலம் போட்ட பதிவு..!
 
அவருடைய தோற்றம், உடல் மொழி, பேச்சு எல்லாமே அவருடைய எண்ணங்களை கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியது. பொதுநிகழ்வுகளில் தோன்றுவதற்கும், பேசுவதற்கும் கூச்சப்பட்ட காலம் போய், இன்று அரசியலுக்குள் குதித்து, தலைமையேற்க நினைக்கும் தன் விருப்பத்தை கொஞ்சமும் தயக்கமின்றி தெளிவாகச் சொல்லும் நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருப்பது மிகப்பெரிய, உறுதியான மாற்றம். தான் நடிக்கிற படங்களின் திரைக்கதையையே படிக்கும் ஈடுபாடு இல்லாதவர் இன்று புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்று சொல்வது அவருக்குள் ஏற்பட்டிருக்கிற தேடலின் சான்று. இது பல இளைஞரை படிக்கத் தூண்டும் என்பது திண்ணம்.
 
ஒவ்வொரு நடிகரும் ஒரு காலகட்டத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும்போது எதிர்கொள்கிற விமர்சனங்களை விஜய்யும் சந்தித்துதான் ஆகவேண்டும். அது ஏற்கனவே தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன்.
பொதுநலச் சிந்தனையுள்ளவர்தானே அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து சிந்திப்பார்? இது வரவேற்கப்பட வேண்டிய விஷயந்தானே?. அரசியலில் உள்ளவரின் குடும்பத்தினர் வந்தாலும் விமர்சனம்; அரசியல் தொடர்பே இல்லாதவர் வந்தாலும் விமர்சனம் என்றால் பிறகு யார்தான் வரவேண்டும்?
 
மக்களிடையே ஏற்கனவே செல்வாக்கு உள்ளவர் தனக்கிருக்கும் புகழையும், அந்தஸ்தையும் அவர்கள் நலனுக்கென்று செலவழிக்க நினைப்பது ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? விஜய்யை எடுத்துக்கொண்டால், அவர் இன்று ஒரு படத்துக்கு எவ்வளவு ஊதியம் வாங்குகிறார் என்பது தெரிந்த செய்திதான். வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் செய்கிறார். தொழிலின், புகழின் உச்சத்தில் இருக்கிறார்.
 
இரண்டு மூன்று தலைமுறைகள் அமர்ந்து உண்ணக்கூடிய செல்வம் இருக்கும்போது அவர் எதற்காக அரசியலுக்கு வருவதன் மூலம் தன் வருமானத்தையும் கெடுத்துக்கொண்டு, தன் சேமிப்பையும் இழந்து, பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டும்?
இதையெல்லாம் சிந்திக்காமலா இந்த முடிவை எடுத்திருப்பார்? அப்படியென்றால், அதையும் தாண்டிய ஒரு மக்கள் நல நோக்கம் இருக்க வேண்டுமல்லவா?. அவர் வருவது அவர் முடிவு. அவர் வரட்டும், பேசட்டும், செயல்படட்டும்.
 
நம்பினால் மக்கள் வாக்களிப்பர், இல்லையென்றால் ஒதுக்குவர். களத்தில் எதிர்கொண்டு அவர் கருத்துகளை விமர்சிப்பது தகுதியாயிருக்கும். வாங்க விஜய்! தமிழ்நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல திட்டங்களை வகுங்கள்!
அறிவார்ந்த தமிழ்ச்சமூகம் பொருத்தமானவரை ஆதரிக்கும்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget