பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை விமர்சிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கரை அவர் மறைமுகமாக சாடும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாத்துறையில் சீனியரான சந்தோஷ் நாராயணன் இந்த மாதிரி முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொண்டது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சுயாதீனமாக ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த சாய் அப்யங்கர் தற்போது திரைத்துறையிலும் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இசையில் வெளியான கருப்பு , டியூட் ஆகிய படங்களின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே நேரம் அடுத்தடுத்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார்.
திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பல முன்னணி இசையமைப்பாளர்கள் செய்ய முடியாததை சாய் அப்யங்கர் செய்து காட்டி வருகிறார். அதுதான் ரசிகர்களிஉன் பல்ஸ் தெரிந்து ஒவ்வொரு பாடலிலும் ஹிட் கொடுப்பது. இதனால் பலருக்கு அவர் மீது வனமும் இருந்து வருகிறது. அந்த வகையில் சாய் அப்யங்கரை கேலி செய்யும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ
சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் கானா பாடகர் ஒருவருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ கானா பாடகர் 'Unplugged' என்றால் என்ன என்று கேட்க அதற்கு சந்தோஷ்ன் நாராயண் 'பாட்டு ஹிட் ஆகிடுச்சுன்னு நம்ப வைக்கிறதுக்கு ' என பதிலளிக்கிறார். சாய் அப்யங்கரின் ஒவ்வொரு பாடல் ஹிட் ஆகும்போதும் அதன் Unplugged வெர்ஷன் ஒன்றை அவர் வெளியிடுவது வழக்கம். இதனை கேலி செய்யும் விதமாக சந்தோஷ்ன் நாராயணன் பேசியிருப்பாது ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சினிமாத்துறையில் சாய் அப்யங்கரை விட சீனியரான சந்தோஷ் நாராயணன் இந்த மாதிரியான முதிர்ச்சியற்ற நடத்தையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram
அட்லீ இயக்கும் அல்லு அர்ஜூன் படம் , கார்த்தி நடிக்கும் மார்ஷல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















