(Source: ECI/ABP News/ABP Majha)
Idly Kadai : 40 நிமிஷம் படம் பார்த்தேன்...தனுஷ் டைரக்ஷன் பற்றி ஜி.வி.பிரகாஷ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா
தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை படத்தின் முதல் 40 நிமிடம் படம் பார்த்ததாகவும் படம் சூப்பராக வந்திருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்
இட்லி கடை
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் படத்தை இயக்கி வருகிறார். நித்யா மேனன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தையும் அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கோல்டன் ஸ்பாரோ பாடல் ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகி இணையத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜி.வி. பிரகாஷ் குமார் தனுஷின் இட்லி கடை படம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இட்லி கடை பற்றி ஜி.வி பிரகாஷ் குமார்
" தனுஷின் இட்லி கடை படம் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இது ஒரு கிராமத்து கதை. ஏற்கனவே தனுஷ் நடித்த அசுரன் , ஆடுகளம் போன்ற கிராமத்து கதைகளுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். இட்லி கடை தனுஷ் இயக்கத்தில் உருவாகும் கிராமத்து கதை. தனுஷ் எனக்கு 40 நிமிடம் படம் போட்டு காட்டினார். படம் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது. தனுஷ் டைரக்ஷனில் இருக்கும் மிகப்பெரிய பிளஸ் என்றால் அவரது கதைகளில் இருக்கும் எமோஷன் தான். இன்றைய சூழலில் மற்ற இயக்குநர்களின் படங்களில் மிஸ் ஆவது இந்த எமோஷன் தான். ஆனால் தனுஷ் எமோஷனை சூப்பராக கையாண்டிருக்கிறார். " என ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
GV Prakash Recent Interview 💥
— Movie Tamil (@MovieTamil4) November 3, 2024
- Rural Film like #Asuran and #Aadukalam
- Directed by #Dhanush, #IdlyKadai is a rural action film
- I have watched the movie 40 Mins and it is very good
- The shooting will be completed in a few days.#Kubera
pic.twitter.com/D2pAza4ZZk
குபேரா
ஒரு பக்கம் தனுஷ் அடுத்தடுத்து படங்களை இயக்கி வந்தாலும். இன்னொரு பக்கம் அவர் நடித்துள்ள குபேரா படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிரது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.