மேலும் அறிய

"புதுசா வந்திருக்குற குழந்தையையும் சேத்து காப்பாத்துவேன்.." : இமான் தந்தை மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா இமானின் முன்னாள் மனைவி?

டி.இமானின் திருமணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சார்டின் பெயரில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தும், அவரது தந்தை மீது புகார் கூறியும் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் அமலி உபாலித் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அமலி உபாலித் மறைந்த திரைப்படக் கலை இயக்குநர் உபாலித்தின் மகள். கடந்த மே 15 அன்று நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இசையமைப்பாளர் டி.இமான் தகவல் வெளியிட்டிருந்தார். டி.இமானின் திருமணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சார்டின் பெயரில் சமூக வலைத்தளங்களில் டி.இமானின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், அவரது தந்தை மீது புகார் கூறியும் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்தப் பதிவில், `டியர் டி.இமான், உங்கள் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்களோடு 12 ஆண்டுகள் வாழ்ந்தவரை உடனே மாற்றிக் கொள்ள உங்களால் முடிந்திருக்கிறது. உங்களைப் போன்ற ஒரு நபருக்காக எனது காலத்தை வீணடித்து முட்டாளாகியுள்ளேன் என நினைக்கிறேன். நான் இதற்காக வருந்துகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக உங்கள் குழந்தைகளைப் பார்க்கவோ, அவர்கள் குறித்து கவனம் செலுத்தவோ முடியாத உங்களால் அவர்களுக்கும் மாற்று கண்டுபிடிக்க முடிந்திருக்கிறதா? என்ன நடந்தாலும், உங்கள் தந்தையிடம் இருந்து எனது குழந்தைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் புதிதாக வந்திருக்கும் குழந்தையையும் பாதுகாப்பேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இது ஒருபக்கம் இருக்க, இசையமைப்பாளர் டி.இமான் தனது மறுமணம் குறித்தும், அமலி உபாலித்தின் மகளைத் தன் மகளாக ஏற்றுக் கொண்டிருப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

`அமலி உபால்துடனான எனது மறுமணம் குறித்த தகவலைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது தந்தை டேவிட் கிருபாகர தாஸ் என் கடின காலங்களில் எனக்கு தூணாக இருந்ததனால் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக நானும், எனது குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்களுக்கு மருந்தாக இந்தத் திருமணம் இருக்கிறது. மறைந்த எனது தாய் மஞ்சுளா டேவிட்டிடன் இருந்து வந்த ஆசிர்வாதமாக இதனைக் கருதுகிறேன். அமலி போன்ற சிறந்த நபரை எனக்கு காட்டிய எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அமலியின் மகள் நேத்ரா இனி எனது மூன்றாவது மகளாக இருப்பார். நேத்ராவின் தந்தையாக இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. என் மகள்கள் வெரோனிகா, ப்ளேசிக்கா ஆகியோர என் திருமண நாளில் மிஸ் செய்கிறேன். முழு அன்புடன், என் மகள்கள் ஒருநாள் என் வீட்டுக்கு வருவார்கள் என நம்புகிறேன். அப்போது நான், அமலி, நேத்ரா மற்றும் எனது உறவினர்கள் அனைவருமே என் மகள்களை வரவேற்க காத்திருக்கிறோம். அமலியின் குடும்பத்தினரின் தீராத அன்புக்கு நன்றி. என் இசை ரசிகர்கள் கடந்த காலங்களில் எனக்கு ஆதரவாக இருந்ததற்கும் நன்றி!’ என டி.இமான் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 

Posted by D Imman on Tuesday, 17 May 2022

கடந்த 2008ஆம் ஆண்டு, கணினி பொறியியலாளர் மோனிகாவைத் திருமணம் செய்துகொண்டார் டி.இமான். இருவருக்கும் வெரோனிகா டோரதி இமான், ப்ளேசிக்கா கேதி இமான் என்ற இரண்டு மகள்கள் உண்டு. கடந்த ஆண்டு டி.இமானும், மோனிகாவும் இருதரப்பு சம்மதத்துடன் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget