Thalapathy 68: தளபதி 68-ல் விஜய்யுடன் நடிக்கப் போகும் தல தோனி? அதிரப்போகும் கோலிவுட்.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..
வெங்கட்பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோனி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
![Thalapathy 68: தளபதி 68-ல் விஜய்யுடன் நடிக்கப் போகும் தல தோனி? அதிரப்போகும் கோலிவுட்.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.. MS Dhoni rumoured to make his movie debut with upcoming movie Thalapathy 68 reports Thalapathy 68: தளபதி 68-ல் விஜய்யுடன் நடிக்கப் போகும் தல தோனி? அதிரப்போகும் கோலிவுட்.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/4b6e1d998130820f51fe9e4514e3dea01692073625401102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்த சாதனையாளர்.
திரைத்துறையில் தோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடத்தொடங்கிய பிறகு தோனிக்கும், தமிழ்நாட்டிற்குமான நெருக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. விளையாட்டுத்துறை மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வந்த தோனி சென்னையை தலைமையிடமாக கொண்டு திரைப்பட நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.
இவர்களது தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் எல்.ஜி.எம். என்ற படம் வெளியாகியது. இந்த நிலையில், விளம்பரங்களில் நடித்து வந்த தோனி திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. கடந்த மாதம் இதுதொடர்பாக பேசிய தோனியின் மனைவி ஷாக்சி நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் தோனி நடிப்பது குறித்து பரிசீலிப்பார் என்று கூறியிருந்தார்.
தளபதி 68ல் தல:
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் தோனி நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் சென்னை 28, சென்னை 28 பாகம் 2 உள்பட கிரிக்கெட் படங்களை இயக்கியவரும், கிரிக்கெட் பிரியருமான வெங்கட்பிரபு தளபதி 68 படத்தை இயக்குவதால் நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் தோனி நடிக்க வாய்ப்புகள் மிக அதிகளவில் உள்ளது என்றே அனைவரும் கருதுகின்றனர்.
கிரிக்கெட்டின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி, திரைத்துறையின் தளபதி விஜய் படத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. லியோ படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ளதால் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனம் செலுத்தும் தோனி?:
இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல்வேறு சாதனைகளை படைத்த தோனிக்கு தற்போது 40 வயதாகிவிட்டதால், அவர் அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், நடப்பு ஐ.பி.எல். தொடரின் சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றிய பிறகு தனது உடல்நிலை ஒத்துழைக்குமா? என்று தோனி பேசியிருந்ததால் அவர் அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு படமான தோனி அன்டோல்ட் ஸ்டோரி சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது. தோனி நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக அவரது ரசிகர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தோனி கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க: Independence Day Movies: சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்.. உங்க ஃபேவரைட் படம் இருக்கான்னு பாருங்க..!
மேலும் படிக்க: HBD Arjun Sarja: ‘தேசப்பற்று நாயகன்’ அர்ஜூன் பிறந்தநாள் இன்று.. இணையத்தில் குவியும் வாழ்த்துகள்...!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)