![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
”ப்பா..அவரு கண்ணாலயே பேசுவாரு “ - துல்கரை புகழ்ந்து தள்ளிய மிருணால் தாக்கூர்!
சீதா ராமம் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.20 லட்சமும், 2வது நாளில் ரூ.80 லட்சமும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
![”ப்பா..அவரு கண்ணாலயே பேசுவாரு “ - துல்கரை புகழ்ந்து தள்ளிய மிருணால் தாக்கூர்! Mrunal Thakur praises Sita Ramam co-star Dulquer Salmaan: 'He's the only actor who expresses with his eyes' ”ப்பா..அவரு கண்ணாலயே பேசுவாரு “ - துல்கரை புகழ்ந்து தள்ளிய மிருணால் தாக்கூர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/18/da38c17699d4e34317dc087cc48e316b1663482098689224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரம்மியமான காதல் கதை உள்ள திரைப்படம் "சீதா ராமம்". தெலுங்கு படமாக உருவாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகியிருந்தது. துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த இப்படம் மூலம் துல்கர் சல்மான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இரானுவ வீரனுக்கும் , இளவரசிக்குமான எளிமையான காதலை அத்தனை அழகாக சொன்ன படம்தான் சீதா ராமம். படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனை குவித்த நிலையில் , தற்போது அமேசான் பிரைம் ஒடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
துல்கர் செம நடிகர் :
இந்த நிலையில் படத்தின் நாயகியான மிருணால் தாக்கூர் , தனது சக நடிகரான துல்கரை புகழ்ந்து பேசியுள்ளார். அதில் “ நான் சந்தித்த நடிகர்களிலேயேதுல்கர் மட்டும்தான் கண்களாலேயே பாவங்களை வெளிப்படுத்திய ஒரே நடிகர். அவரை மேட்ச் செய்து நடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர் எனக்கு ஒரு முன்மாதிரி “ என்றார்.
சீதா ராமத்தின் கதைக்கரு :
காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.ஒருக்கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை.
View this post on Instagram
கலெக்ஷன் :
சீதா ராமம் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.20 லட்சமும், 2வது நாளில் ரூ.80 லட்சமும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல இந்திய அளவில் இப்படம் ரூ.8.90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னணி நடிகர்களுடன் இந்தியில் போட்டி போட்ட சீதா ராமம் படத்திற்கு அதிக வரவேற்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)