Lal Salaam Twitter Review: மாஸ் செய்தாரா மொய்தீன் பாய்? மதத்தை மனிதநேயம் வென்றதா? லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்!
Lal Salaam Movie Twitter Review: ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் முதல் விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
3, வை ராஜா வை திரைப்படங்களை அடுத்து ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் மையக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் கபில் தேவ், நடிகர்கள் செந்தில், தம்பி ராமைய்யா நடிகைகள் நிரோஷா, ஜீவிதா எனப் பலரும் நடித்துள்ளனர்.
90களில் நடந்த கதை, கிரிக்கெட் மற்றும் மத அரசியலைப் பேசும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாட்ஷா படத்துக்குப் பிறகு இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் இஸ்லாமியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று இப்படம் காலை 9 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சி வெளியாகிறது.
இந்நிலையில், வெளிநாடு, மற்றும் அண்டை மாநிலங்களில் லால் சலாம் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றைப் பார்க்கலாம்!
#LalSalaamReview - IMAGE WILL CONVEY THE MSG FOR NOW.
— Kingsley (@CineKingsley) February 9, 2024
🔥🔥🔥🔥🔥 🏆🏆🏆🏆🏆
Conveyed the movie with a powerful msg 💪🏽🔥@ash_rajinikanth 🏆
👏🏽👏🏽👏🏽👏🏽#LalSalaam 🕉️✝️☪️
I repeat, ANNAIVARUKKUM aana #Thalaivar @rajinikanth ❤️🤘🏽@TheVishnuVishal @vikranth_offl & entire team… pic.twitter.com/Iiwyt4Bglc
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் பவர்ஃபுல் மெசேஜை சொல்லியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
#LalSalaamReview
— Matt.S (@mattskumar) February 9, 2024
Content driven plot
Goosebumps inclusive
Intense emotional sports drama
Goutham menon + Vetrimaran & Pandiraj
vibe @ash_rajinikanth will grab some awards for sure #LalSalaam #LalSalaamFDFS pic.twitter.com/bQ2ERXDc4m
“கண்டெண்ட்டை மையப்படுத்திய படம், உணர்ச்சிகரமான ஆழமான ஸ்போர்ட்ஸ் டிராமா, கூஸ்பம்ப்ஸ் கண்டிப்பாக வரும். கௌதம் மேனன், வெற்றிமாறன், பாண்டிராஜ் படங்கலைப் பார்த்தது போல் உணர்வு, ஐஸ்வர்யாவுக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
#LalSalaamReview
— J’s Tweet (@RealJTweets) February 9, 2024
👉 Despite its powerful subject matter, "Lal Salaam" suffers from a weak narration.
👉#Thalaivar's role as Moideen Bhai transcends a merely extended cameo, while Vishnu-Vikranth both deliver neat performances.
👉However, the film falters with poor… pic.twitter.com/TXLRiUxKNV
“படம் ஆழமான கருத்தைக் கொண்டிருந்தாலும், அது சொல்லப்பட்ட விதம் சுமாராக உள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் நல்ல பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளனர். மொய்தீன் பாயாக நீளமான சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். திரைக்கதை வேகமாக இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
#LalSalaamReview
— Matt.S (@mattskumar) February 9, 2024
Humanity should defeat religion
Second half was disappointing in recent movies
But #LalSalaam scores better post interval .
Climax was hard ✨🔥
Winner ✨✨✨ pic.twitter.com/4uiWL1usi0
"மனித நேயம், மதத்தை வெல்ல வேண்டும், சமீபத்திய படங்களில் இரண்டாம் பாதி சொதப்பலாக உள்ளது, ஆனால் லால் சலாம் இரண்டாம் பாதி பெட்டராக வந்துள்ளது. படம் வெற்றி பெற்றுவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
#LalSalaamFDFS Neatly narrated by @ash_rajinikanth handling the subject well. A pure content based movie & connect well with family audiences & fans too with balanced mass scenes. Dialogues are good. #SuperstarRajinikanth extended comeo is 🔥 BGM& DOP is good #LalSalaamReview 👍
— MP 🇮🇳 (@kmpdiwa) February 9, 2024
"முழுக்க முழுக்க கண்டெண்ட் சார்ந்த படம், குடும்பத்துடன் சென்று பார்க்கலாம், மாஸ் காட்சிகளும் உள்ளன. வசனங்கள் அருமை. சூப்பர் ஸ்டாருக்கு வரும் பிஜிஎம் நல்லா இருக்கு” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Lal Salaam: “மொய்தீன் பாய்” மட்டுமா..? ரஜினி இதுவரை நடித்துள்ள இஸ்லாமிய கேரக்டர்கள் என்னென்ன தெரியுமா?