மேலும் அறிய

ஹாய், ஒன்ஸ் மோர் படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘மொத ராத்திரி’... சத்தமில்லாமல் வென்ற ஸ்லீப்பர் ஹிட்!

குறைந்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘மொத ராத்திரி’ ரசிகர்களின் ஆதரவால் வசூலில் முன்னேறி, ‘ஹாய்’, ‘ஒன்ஸ் மோர்’ படங்களை விட சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில், குறைந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து கவனம் பெறும் சிறிய படங்களும் அவ்வப்போது வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ‘மொத ராத்திரி’ திரைப்படம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. புதுமணத் தம்பதிகளின் முதலிரவை மையமாக வைத்து ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ளது.

ஸ்லீப்பர் ஹிட் அடித்த மொத ராத்திரி

வெளியான முதல் சில நாட்களிலேயே இப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, வெளியான மூன்று நாட்களில் சுமார் ரூ.1.8 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதும், ரசிகர்களின் ஆதரவு காரணமாக வசூல் அதிகரித்து வருவதும் படக்குழுவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் படத்தை பாராட்டி, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் சரியான அளவில் கலந்த குடும்பப் படமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கவமீர்க்க தவறிய ஹாய் , ஒன்ஸ் மோர் 

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு எடவன் இயக்கிய இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.5 கோடியை கடந்த இப்படம், ஐந்தாவது நாளில் ரூ.77 லட்சம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நாளில் வெளியான ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படம், காதலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலை எதிர்கொள்ளும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், வெளியான நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் ‘ஹாய்’ 5 நாட்களில் ரூ.7.50 கோடிக்கும் அதிகமாகவும், ‘ஒன்ஸ் மோர்’ ரூ.2 கோடிக்கும் குறைவாகவும் தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், ‘மொத ராத்திரி’ 12 நாட்களில் சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமான தமிழக வசூலை பதிவு செய்துள்ளது. பெரிய நட்சத்திர பலம் இல்லாமல் வெளியான இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் தாக்குப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் குறைந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி ரசிகர்களின் ஆதரவால் வசூலை அதிகரித்துள்ள ‘மொத ராத்திரி’ இந்த ஆண்டின் ஸ்லீப்பர் ஹிட்களில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget