IMDB Top 10 Indian Movies : கடைசி இரண்டு இடங்களில் தமிழ் படங்கள்.. 9-வது இடத்தில் வாரிசு.. iMDB-இன் டாப் 10 இந்தியப் படங்கள்
இந்திய அளவில் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எம்.டி.பி இணையதளம்
இந்திய அளவிலான டாப் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எம்.டி.பி. இந்தப் பட்டியலில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் முதலிடத்திலும் விஜய் நடித்த வாரிசு ஒன்பதாம் இடத்தையும் பிடித்துள்ளது.
iMDB
உலக அளவில் திரைப்படங்கள், இணையத் தொடர்களுக்கான மதீப்பீடுகளை வழங்கும் தளம் imdb. இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் அந்த வருடத்தில் வெளியான சிறந்த பத்துத் திரைப்படங்களில் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு உலகளவில் கவணம் பெற்ற படங்கள் மற்றும் இணையத் தொடர்களுக்கானப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் நடித்து அமேசான் பிரைமில் வெளியான ஃபார்ஸி இணையத் தொடர் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது அதே மாதிரி சிறந்த 10 இந்தியப் படங்களுக்கானப் பட்டியலையும் வெளியிட்டது.
சிறந்த 10 இந்திய படங்கள்
இந்தப் படத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பதான் திரைப்படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இரண்டாவது இடத்தில் சல்மான் கான் நடித்த கிஸி கா பாய் கிஸி கா ஜான் படம் இடம்பெற்றது.
மூன்றாவது இடத்தைப் பிடித்த கேரளா ஸ்டோரி
ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை கேரளா ஸ்டோரி இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் இந்தப் படம் வெளியிடுவதற்கு தடைகூட விதிக்கப்பட்டது. தற்போது இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கேரளா ஸ்டோரி. தொடர்ந்து து ஜூட்டி மே மக்கார், மிஷன் மஜ்னு, சோர் நிக்கல் கே பாகா , ப்ளடி டாடி சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹே முதலியப் படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.
ஒன்பதாவது இடத்தில் வாரிசு
ஒன்பதாவது இடத்தில் விஜய் நடித்த வாரிசு படம் இடம்பெற்றுள்ளது இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் படம் இதுதான். இதனைத் தொடர்ந்து பத்தாவது இடத்தை மற்றொரு தமிழ் படம் பிடித்திருக்கிறது அது வேறு யாரும் இல்லை மனிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தான். தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டின் முதல் பாதி எப்படியோ இனி வரக்கூடிய மாதங்களிலும் சரி அடுத்த ஆண்டும் சரி லியோ, ஜெய்லர், ஜவான், இந்தியன் 2, என இந்தியா முழுவதும் கொண்டாடும் வகையிலானப் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.