மேலும் அறிய

உதவ ஆள் இன்றி தவித்த நடிகை ஜெயக்குமாரி.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மா.சு

அமைச்சர் மா.சுப்பரமணியன், அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என்று வாக்களித்துள்ளார்.

பழம்பெரும் தமிழ் நடிகை ஜெயக்குமாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் நடிகையான ஜெயகுமாரிக்கு நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்த நிலையில், தற்போது அமைச்சர் மா.சுப்பரமணியன், அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து தரப்படும் என்று வாக்களித்துள்ளார்.

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜெயகுமாரி. நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்‌ஷாக்காரன், தேடி வந்த லட்சுமி, சிஐடி சங்கர், தபால்காரன் தங்கை, அருணோதயம், காசேதான் கடவுளடா, முள்ளும் மலரும், திருமகள் , பதிலுக்கு பதில், வைரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில்தான் அதிகமாக நடித்திருந்தார். 14 வயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி தான் இவரது முதல் தமிழ் படம் ஆகும் .1968 ஆம் ஆண்டு மலையாளத்தில் கலெக்டர் மாலதி மூலம் அறிமுகமானார் . 

70 வயதான ஜெயகுமாரி தற்போது வேளச்சேரியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் இறந்து விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில், நடிப்பதை விட கவர்ச்சி நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள். அதனால் டான்ஸ் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். மேலும் சம்பாதித்த பணத்தில் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன். நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லாவை 25 வயதில் காதல் திருமணம் செய்துக் கொண்ட எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

உதவ ஆள் இன்றி தவித்த நடிகை ஜெயக்குமாரி.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மா.சு

 “பைனான்சியருடன் ஏற்பட்ட சண்டையில் படம் வெளியாகவில்லை. அந்த கவலையில் என் கணவர் இறந்துவிட்டார். வாங்கிய கடனுக்காக கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை வாங்கிக்  கொண்டார்கள். அதேசமயம் நான் மூன்று கார்கள் வைத்திருந்த நிலையில், அனைத்தையும் விற்றுதான் வாடகை வீட்டிற்கு குடியேறினேன்.  அதேசமயம் மூத்த மகளை தவிர மற்ற இருவரையும் என்னால் படிக்க வைக்க முடியவில்லை. என் தங்கைகளும், 2 மகள்களும் எனக்கு உதவவில்லை” என ஜெயக்குமாரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஜெயக்குமாரி உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்ற தகவல் அறிந்த இணையவாசிகள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

தற்போது, மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி தேடி வரும் நடிகை ஜெயக்குமாரிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று, அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். நடிகை ஜெயக்குமாரியை சந்தித்த அமைச்சர் மா.சு, 
மருத்துவர்களிடமும் அவரின் உடல்நலம் மற்றும் அவருக்கு அளிக்கபடும் சிகிச்சை குறித்து பேசி தெரிந்து கொண்டார். அவரின் மருத்துவ செலவிற்கு, தமிழக அரசு சார்பில் உதவி செய்து தரப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget