Michael Jackson death mystery : 19 போலி அடையாள அட்டைகள்.. போதைக்கு அடிமை.. மைக்கேல் ஜாக்சன் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
மைக்கே ஜாக்சன் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 ஐ முன்னிட்டு 'TMZ இன்வெஸ்டிகேட்ஸ்: ஹூ ரியலி கில்ட் மைக்கேல் ஜாக்சன்' என்னும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது.
மைக்கேல் ஜாக்சன் :
பாடல் , நடிப்பு என இரண்டிலுமே அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன் . இவரைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. மைகேல் ஜாக்சன் கடந்த 2009 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீடென உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் உயிரிழக்கும் பொழுது அவருக்கு வயது வெறும் 50 தான். ”கிங் ஆஃப் பாப் “ என அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்தனர். மைக்கல் ஜாக்சன் மரணத்திற்கு பின்னால் பல கேள்விகள் இருக்கின்றன. சிலர் அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகின்றனர்.
ஆவணப்படம் :
மைக்கே ஜாக்சன் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 ஐ முன்னிட்டு 'TMZ இன்வெஸ்டிகேட்ஸ்: ஹூ ரியலி கில்ட் மைக்கேல் ஜாக்சன்' என்னும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அந்த ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் போதைப்பொருள் பெறுவதற்காக போலி ஐடியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக ஒன்றிரண்டு போலி அடையாள அட்டைகளை வைத்திருக்கவில்லை, மாறாக 19 போலி அடையாள அட்டைகளை தன்னிடம் வைத்திருந்தார் என கூறுகிறது ஹூ ரியலி கில்ட் மைக்கேல் ஜாக்சன் ஆவணப்படம்.
மைக்கேல் கொலை செய்யப்பட்டார் :
நியூயார்க் போஸ்ட்டின் படி, 'கிங் ஆஃப் பாப்' என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் மயக்க மருந்து அதிகமாக உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அந்த போதை மருந்தை மைக்கேலின் மருத்துவர் கொன்ராட் முர்ரே வழங்கினார் என்றும் கூறுகிறது. இந்த காரணங்களால் மைக்கேலின் மரணம் கொலை என உறுதிப்படுத்திய நீதிமன்றம் , போதை மருந்தை அதிக அளவில் வலி நிவாரணியாக வழங்கிய மருத்துவர் கொன்ராட் முர்ரேவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.அடுத்த மாதம் ஃபாக்ஸ் சேனலில் தோன்றும் TMZ இன்வெஸ்டிகேட்ஸ் ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.ஜாக்சன் தனது வாழ்நாள் முழுவதும் ஆபத்தான அளவு மருந்துகளை எடுத்துக்கொண்டார் என்பதை இந்த ஆவணப்படம் விளக்கும் என கூறப்படுகிறது. மைகேலின் இறப்பை ஆய்வு செய்த LAPD துப்பறியும் ஆய்வாளர் ஆர்லாண்டோ மார்டினெஸ் . “ மைக்கேலுக்கு எங்கு சென்றாலும் எளிமையாக போதை மருந்துகள் கிடைக்கும் சூழல்தான் அவரை மரணம் வரை கொண்டு சென்றது “ என ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
போதைக்கு அடிமையான ஜாக்சன் :
ஜாக்சன் இறக்கும் போது 'கேடோரேட்' அளவிலான பாட்டில்களில் (சுமார் அரை லிட்டர்) புரோபோஃபோல் போதை மருந்தை அருந்தியிருப்பது தெரிய வந்துள்ளது, மைக்கேல் ஜாக்சன் தூங்குவதற்கு Propofol ஐத்தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார் என்கிறது நியூயார் டைம்ஸ் .மைக்கேல் ஜாக்சன் தனது அலுவலகத்தில் மணிக்கணக்கில் டெமரோல் போதை மருந்தை குடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தோல் மருத்துவரான அர்னால்ட் க்ளீன், ஓபியாய்டு டெமெரோலைத் தவிர வேறு மருந்துகளை சூப்பர் ஸ்டார்களுக்கு வழங்கியதாக ஒப்புக்கொண்டதும் நினைவுக்கூறத்தக்கது.