Vijaytv Pugazh: ‛நான் பணிவானவன் தான்… ஆயினும்...’ விஜய் டிவி புகழ் போட்ட மாஸ் பதிவு!
Vijaytv Pugazh: ‛நான் பணிவானவன் தான்… ஆயினும் கைகளை முன்னால் கட்டுவதை விட, பின்னால் கட்டிக்கொள்ளவே விருப்பம்!’
குக் வித் கோமாளி என்பதை விட, குக் வித் புகழ் என்கிற அளவிற்கு பிரபலமாகிவிட்டார் புகழ். விஜய் டிவியின் அறிமுகங்களில் கொஞ்சமும் மவுசு குறையாத மனிதர். கலக்கப் போவது யார் டீமில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவருக்கான திறமையை அவர் அப்போதும், வெளிப்படுத்தியே வந்தார். வாய்ப்புகள் தான், ஒருவரை அடையாளப்படுத்தும் என்பார்கள்.
அந்த வகையில், புகழின் புகழுக்கு அவரே காரணமானார். குக் வித் கோமாளி ஷோ பெரிய ஹிட் அடித்ததில் புகழுக்கு பெரிய பங்கு உண்டு. அடுத்தடுத்து சீசன்களை அந்த நிகழ்ச்சி கடக்க, அவரது கோமாளித் தனமான நடிப்பு பெரிய அளவில் உதவியது. சின்னத்திரையில் கிடைத்த வெளிச்சம், அதன் பின் வெள்ளத்திரை வாய்ப்புகளை அவருக்கு வழங்கியது. பெரிய ஸ்டார்களின் படங்களில் தொடங்கி, பட்ஜெட் படங்கள் வரை இடம் பிடிக்கும் அளவிற்கு புகழ் பெயரை இயக்குனர்கள் டிக் அடிக்கத் தொடங்கினர்.
View this post on Instagram
இன்னும் ஒரு படி மேலே போய், அவரே ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் புகழ். யோகி பாபு போலவே அவரது ஹேர்ஸ்டைலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதையே முதலீடாக வைத்து கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார் புகழ்.
அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிடும் ரீல்கள் பெரிய அளவில் பேசப்படும், பகிரப்படும். அந்த வகையில் சற்று நேரத்திற்கு முன் புகழ் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். மாஸ் ஹீரோ போல், சைடு ஃபோஸ் காட்டிக் கொண்டு நிற்கும் புகழ், பின்னால் தனது கைகளை கட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு விளக்கம் அளித்துள்ளார் புகழ்.
‛நான் பணிவானவன் தான்…
ஆயினும் கைகளை முன்னால் கட்டுவதை விட, பின்னால் கட்டிக்கொள்ளவே விருப்பம்!’
View this post on Instagram
என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷனை அவரே பதிவு செய்துள்ளார்.