மேலும் அறிய

Mark Antony: ஓடிடிக்கு டிசிப்ளினா வரும் கேங்ஸ்டர்கள்.. ‘மார்க் ஆண்டனி’ படத்தை எங்கு, எப்போது பார்க்கலாம்?

விஷால் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

மார்க் ஆண்டனி

பல்வேறு சிக்கல்கள் சவால்களை எதிர்கொண்டு கடைசியாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

விஷால் , எஸ்.ஜே.சூர்யா, ரித்து0 வர்மா, ஒய்.ஜி மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சைன்ஸ் பிக்‌ஷன் கேங்ஸ்டர் கதையாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம்  நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது. 

மீண்டும் மார்கெட்டிற்கு வந்த விஷால்

மார்க் ஆண்டனி படத்திற்கு முன்பாக விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் அவரது கரியரில் ஒரு நல்ல வெற்றிப்படத்தின் குறை இருந்து வந்தது. இப்படியான நிலையில் வெளியாகி மார்க் ஆண்டனி சரிந்து கிடந்த விஷாலின் மார்கெட்டை மீண்டும் துக்கி நிறுத்தியிருக்கிறது.

விஷால் நடித்த படங்களில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் மார்க்  ஆண்டனி. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளில் 25ஆவது நாளை நிறைவு செய்தது. இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் “ மார்க் ஆண்டனி திரைப்படம் 25 ஆவது நாளை திரையரங்குகளில் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சிகரமாக பகிர்ந்துகொள்கிறேன். இந்த படத்தை ரசித்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மார்க் ஆண்டனியின் உலகத்திற்குள் சென்று வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருந்தார்.

ஓடிடி ரிலீஸ்

வெற்றிகரமான திரையரங்க பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஓடிடி பயணத்தை தொடங்க இருக்கிறது மார்க் ஆண்டனி படம். வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அமேசான் பிரைமில் மார்க் ஆண்டனி படம் வெளியாக இருக்கிறது. திரையரங்கத்தில் இந்தப் படத்தை பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் ரிப்பீட் மோடில் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

துப்பறிவாளன்

கடந்த 2017 ஆம் ஆண்டும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறார் நடிகர் விஷால். தனது சொந்த தயாரிப்பில் வெளியான முதல் பாகத்தை இயக்குநர் மிஸ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தற்போது இரண்டாவது பாகத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget