மேலும் அறிய

Marakkar Trailer Out: ஒரு நேர்மையான போராளி குற்றவாளியா? மாஸ் காட்டும் மரைக்காயர் ட்ரைலர்!

மரைக்காயர் படத்தின் மலையாள ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தநிலையில், தற்போது இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் மரைக்காயர். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படையை உருவாக்கிய குன்ஹாலி மரைக்காயரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு பின்னர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்தது. இந்தப் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அண்மையில் கூட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர்  ‘மரைக்காயர்’ படப்பிடிப்பு தளத்தில் பங்குபெற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது  கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Marakkar: Keerthy Suresh shares inspiration of her looks as Aarcha from Mohanlal film

இந்தநிலையில், மரைக்காயர் படத்தின் மலையாள ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தநிலையில், தற்போது இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கைப்பிடியில் சிக்கித்தவிக்கும் எளிய மக்களை காப்பாற்ற, ஒரு தலைவன் அவனே மரைக்காயர். 

இப்படி ஒரு நேர்மையான போராளி எப்படி ஒரு குற்றவாளி ஆனாங்கனு தெரியல...? என்று உதிக்கும் வார்த்தையில் இருந்து குஞ்சாலி என்ற அழைப்பில் உதிக்கிறார் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால். தெறிக்கும் இசையுடன் மோகன்லால், கீர்த்திசுரேஷ், அசோக் செல்வன் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெளிப்படுத்தும் விதம் அந்த கால காட்சியை கண்முன் நிறுத்துகிறது. 

மிக பெரிய எதிர்பார்ப்பின் நடுவில் மரைக்காயர் என்னும் அரபிக்கடலின் சிங்கம் நிச்சயம் அனைத்து திரையரங்குகளையும் ஆட்கொள்ளும். மரைக்காயர் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ம் தேதி வெளியாகும் என படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget