Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரத்தில் சம்மன் அளித்த போலீஸ்; ஆஜாராகாத மன்சூர் கொடுத்த விளக்கம்!
உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், நாளை போலீசில் ஆஜராக அனுமதி கோரி மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார்.
![Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரத்தில் சம்மன் அளித்த போலீஸ்; ஆஜாராகாத மன்சூர் கொடுத்த விளக்கம்! Mansoor Ali Khan has written a letter to the police seeking exemption from appearing today as he is ill Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரத்தில் சம்மன் அளித்த போலீஸ்; ஆஜாராகாத மன்சூர் கொடுத்த விளக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/23/942a79272760a0126ce45cc2a9149ec01700719886206571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று காவல்துறையில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவர் அவ்வபோது பட விழாக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாமல் செய்து பிரச்சினைகளில் மாட்டிகொள்வார். இப்படியான சூழலில், கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்பட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்,
முதன் முதலாக இதுகுறித்து வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா முதல் கண்டன பதிவை வெளியிட, அதனை தொடர்ந்து, திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மன்சூர் அலிகான் முதலில் ஒரு விளக்கம் கொடுத்தாலும், அது யாருக்கும் ஏற்புடையதாக இல்லை. தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையமும் தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும் மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது.
இப்படியான ஒரு விஷயம் ஒரு புறம் நடக்க, மறுபுறம் மீண்டும் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நீட் தற்கொலை, மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தேசிய மகளிர் ஆணையம் பெரிதாக செயல்படாமல் இதற்கு மட்டும் வந்து குரல் கொடுக்கிறார்கள். நடிகர் சங்கம் தன்னிடம் விளக்கம் கேட்காமல் மன்னிப்பு கேட்க சொல்லியிருக்க கூடாது. முறைப்படி நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று (நவம்பர் 22) நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டது. மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு அவர் இல்லாத நிலையில் மனைவியிடம் சம்மனை வழங்கினர். அதன்பிறகு காவல் நிலையத்தில் ஆஜராகுவாரா என்ற கேள்வியும் எழுந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், நாளை போலீசில் ஆஜராக அனுமதி கோரி மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)