மேலும் அறிய

manoj bajpai meets vijay sethupathi |விஜய் சேதுபதி , மனோஜ் பாஜ்பாய் சந்திப்பு - கொண்டாடும் ரசிகர்கள் !

அப்போது விஜய் சேதுபதியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட மனோஜ் பாஜ்பாய், நான் இவருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

இயல்பான நடிப்பால் பலரின் அன்பை பெற்றவர் விஜய் சேதுபதி. அதனால்தான் அவர் மக்கள் செல்வன் என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறார். 2019 ஆம் ஆண்டுக்கான 67 வது தேசிய விருது வழங்கும் விழாவில் , விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. டியூலக்ஸ் என்ற ஆந்தாலஜி படத்தில் விஜய் சேதுபது திருநங்கையாக நடித்து அசத்தியிருந்தார். அதை அங்கீகரிக்கும் விதமாக விஜய் சேதுபதிக்கு இவ்விருது கிடைத்தது. விருதை பெற்றுக்கொண்ட விஜய் சேதுபதி ““தேசிய அளவிலான கலைஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தில்இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவை மட்டும் நம்பி நடித்தேன். தேசிய விருது பெறுவது மகிழ்ச்சி” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியுள்ளார். அது குறித்த புகைப்படங்களை மனோஜ் பாஜ்பாய் தற்போது வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்திய சினிமா நட்சத்திரங்கள் சங்கமித்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை பிரபல தனியார் நிறுவம் ஏற்பாடு செய்திருந்தது.ரன்வீர் சிங், தீபிகா படுகோன், விஜய் தேவரகொண்டா, ஆலியா பட், பார்வதி , விஜய் சேதுபதி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட நடிகர்கள் அதில் பங்கேற்று இந்திய சினிமா குறித்தும், தங்களின் பங்களிப்பு குறித்தும் பேசியிருந்தனர். அப்போது விஜய் சேதுபதியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட மனோஜ் பாஜ்பாய், நான் இவருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலான  சந்திப்பா அல்லது மீண்டும் விஜய் சேதுபதி பாலிவுட் எண்ட்ரியா என சரியாக தெரியவில்லை. புகைப்படத்தை பகிர்ந்த மனோஜ் பாஜ்பாய் ”தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு அட்டகாசமான, பிரமதமாக நடிக்கக்கூடிய நடிகரும் நண்பருமான விஜய் சேதுபதியை சந்தித்தேன். சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் “ என தெரிவித்துள்ளார். 

manoj bajpai meets vijay sethupathi |விஜய் சேதுபதி , மனோஜ் பாஜ்பாய் சந்திப்பு - கொண்டாடும் ரசிகர்கள் !

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் ஒரே புகைப்படத்தில் இரண்டு லெஜெண்ட்ஸ் என கொண்டாடி வருகின்றனர். மனோஜ் பாஜ்பாய் ஒரு சிறந்த நடிகர் , விழாவில்  சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கும் தனுஷுக்கும் கிடைத்தது.இவர் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் இரண்டு பாகங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் மூன்றாம் பாகத்தில்தான் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என கிசு கிசுக்கப்பட்டது. பின்னர் அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது..ஆனால் விஜய் சேதுபதி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கும் வேறு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget