மேலும் அறிய

Vijay Tribute to Manobala: மறைந்த மனோபாலாவிற்கு நேரில் இறுதி மரியாதை செலுத்திய விஜய்..

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரைப்பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் தனக்கென சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இவருடைய இறப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

திரையுலகத்தினர் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் மனோபாலா மறைவிற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சாலிகிராமத்தில் உள்ள மறைந்த மனோபாலாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், மறைந்த மனோபாலா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழில் கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர் தனது யூ ட்யூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்னைக்கு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் இமயம் எனப் போற்றப்படுபவரான,  பாரதிராஜா கூறியுள்ளதாவது, ”என்னிடம் எவ்வளவோ உதவியாளர்கள் பணி புரிந்தனர். ஆனால் மனோ பாலா போல் ஓவியம் வரையக்கூடியவர் யாரும் இல்லை. மனோபாலா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர். படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு பல ஆலோசனைகளை கூறியுள்ளார். மனோபாலாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞன் நம்மிடையே இல்லை  என கூறும் போது மனது கனக்கிறது. மனது சுமையாக உள்ளது” என பாரதி ராஜா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது சென்னையில் இல்லை எனவும் நாளை காலை மனோபாலாவுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார். 

நினைவுகளைப் பகிர்ந்த இளையராஜா

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பின்னர் இயக்குநராக மாற்றிக்கொண்டவர் மனோபாலா. ”என்னைப்பார்க்க கோடம்பாக்கம் பாலத்தில் எத்தனையோ இயக்குநர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி என்னை பார்க்க காத்திருந்து பார்ப்பார். மேலும், என்னை அவ்வப்போது ரெக்கார்டிங் தியேட்டரில் சந்தித்து சினிமா மற்றும் சினிமாவைத் தவிரவும் அதிக விஷயங்களை என்னிடம் பகிர்வார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என மனோபாலாவுடனான தனது நினைவுகளை இசைஞானி இளையராஜா பகிர்ந்துள்ளார். 

45 வருட பழக்கம் -  சத்யராஜ்

”நானும் மனோபாலாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். அவரது இயக்கத்தில் பிள்ளை நிலா மற்றும் மல்லு வேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மனோபாலாவின் மறைவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மனோபாலாவின் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget