தள்ளுவண்டி கடையில் உணவு! லிவ் தி மொமன்ட் மெசேஜ் சொன்ன மணிமேகலை
மணிமேகலையை நமக்கெல்லாம் சன் டிவி வாயிலாகத் தான் தெரியும். சன் மியூஸிக்கில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினி மணிமேகலை காதலரை கரம் பிடித்தார்.
மணிமேகலையை நமக்கெல்லாம் சன் டிவி வாயிலாகத் தான் தெரியும். சன் மியூஸிக்கில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினி மணிமேகலை அவருடைய காதலரை கரம் பிடித்தார்.
தன்னுடைய காதலர் ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார் மணிமேகலை. அவர்களின் காதல் திருமணம் ஊடகங்களின் முக்கியச் செய்தியாகக்கூட இடம் பெற்றது. ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அவர் விஜய் டிவிக்கு மாறினார். வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிக்களில் மணிமேகலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்போது அவர் ஒன்றிரண்டு ஷோக்களையும் தனியாக தொகுத்து வழங்குகிறார். சின்ன ஃப்ரேம் உடல் வாகு, துருதுரு பேச்சு, குறும்பு, ஆங்கரிங் திறமை என அசத்தும் மணிமேகலை விஜய் டிவியில் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டியும் மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜ்டாக வைத்திருப்பார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை எப்போதும் பார்க்கலாம். அது போல் அவர் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கிறார். ஹுசைன் மணிமேகலை என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிலும் தவறாமல் வீடியோ அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
குறைந்தபட்சம் வாரம் ஒரு வீடியோவாவது இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். இதிலும் பல காமெடி சீன்கள் இடம்பெறும். அதே போன்று இவரின் வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆவதும் வழக்கமான ஒன்று. மணிமேகலை வீட்டு ரைஸ் குக்கர் வெடித்த வீடியோவிற்கு வந்த கமென்ட்டெல்லாம் வேற லெவல் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்த வரிசையில் இப்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஜோடியாக மணிமேகலையும், ஹுசைனும் பெங்களூர் சென்றனர். பெங்களூரில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த மணிமேகலை, ஹோட்டல் அறையின் ப்ரைவேட் டெரேஸ் வழியாக பெங்களூர் அழகைப் பற்றிப் பேசியுள்ளார். காலையிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு குட்டி குட்டி ஷாப்பிங்க் செய்துவிட்டு வந்ததாகவும் கூறிய மணிமேகலை, இரவு உணவுக்கு தள்ளுவண்டி கடைக்குப் போகப்போவதாகக் கூறி பார்வையாளர்களை தக்க வைக்கிறார். ஒரு வழியாக காரில் ஏறி தள்ளுவண்டிக் கடையை கண்டுபிடிக்கும் மணிமேகலை வழியெல்லாம் பெங்களூர் டிராஃபிக் பற்றி கலாய்த்துப் பேசி கடையைப் பார்த்ததும் கணவரிடம் மெனு சொல்லி அனுப்புகிறார். கணவர் வாங்கி வர வெஜ் ஆமெல்ட், ஹாஃப் பாயிலை காருக்குள்ளேயே லபக்கிட்டு சோத்து மூட்டையுடன் சைலன்ட்டா ஒரு ஸ்ட்ரீட்டுக்குப் போய் கார் பேனட்டில் வைத்து சோத்தை சாப்பிடணும் என ஆசையை கணவரிடம் தெரிவிக்க, அவரும் அப்படியொரு தெருவுக்கு மணிமேகலையை அழைத்துச் செல்கிறார். அங்கு உணவை ரசிக்கும் மணிமேகலை கடைசியா சொன்னது தான் ஹைலைட். எனக்கு லிவ் தி மொமன்ட் தான் பிடிக்கும். என்னதான் பெரிய கார் இருந்தாலும் அதில் தள்ளுவண்டி உணவை வச்சு சாப்பிடுறது ஒரு லவ், ஒரு எமோஷன். அதுல எனக்கும், ஹுசைனுக்குமான காதல் இருக்கிறது எனக் கூறுகிறார். இந்த வீடியோவை வழக்கம் போல் மணிமேகலை, ஹுசைன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.