R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் - மிரண்டு போன மணிகண்டன்..!
R. Sundarrajan : ஆர். சுந்தர்ராஜன் ஒரு மிக பெரிய நூலகம். அவர் அனுபவங்களை சொல்லச் சொல்ல நமக்கு அப்படியே பூரிப்பாக இருக்கும். அவருக்கு இருக்குற தைரியத்தை நினச்சு பார்க்கும் போதே பயமா இருக்கும்.
ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவரின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதுடன் நல்ல வசூலையும் ஈட்டி வருகிறது.
இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'லவ்வர்'. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஸ்ரீ கௌரி பிரியா, சரவணன், ஹரிஷ் குமார், கீதா கைலாசம், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'லவ்வர்' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சமயத்தில் இயக்குநர், நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார் நடிகர் மணிகண்டன். அவர் லவ்வர் படத்தை அடுத்து ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் ஆர். சுந்தர்ராஜனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார் நடிகர் மணிகண்டன்.
"அவர் ஒரு மிக பெரிய நூலகம் என்றே சொல்லலாம். அந்த படத்தில் இந்த சீன் எடுக்கும் போது என்னாச்சு தெரியுமா? அது எடுக்கும் போது என்ன ஆச்சு தெரியுமா என தினமும் ஏதாவது ஒரு கதை சொல்லிகிட்டே இருப்பார். அவர் அந்த அனுபவங்களை சொல்லச் சொல்ல நமக்கு அப்படியே பூரிப்பாக இருக்கும். அவருக்கு இருக்குற தைரியத்தை நினச்சு பார்க்கும் போதே பயமா இருக்கு. கதையெல்லாம் இல்லையாம், மைண்ட்ல படத்தோட லைன் தான் ஞாபகம் இருக்குமாம். சீன் எல்லாம் அங்க போய் அதுக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி எடுப்பாராம்.
அப்போ ஒரு நாள் அவர் எடுத்த 'நான் பாடும் பாடல்' படம் பத்தி சொன்னார். முதல அந்த படம் வந்து அப்பா பொண்ணு வைச்சு தான் எடுத்து இருக்காரு. படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிந்த பிறகு படத்தை பார்த்து இருக்காரு. இதில் ஏதோ சரியில்லையே என யோசிச்சு இருக்காரு. அப்போ தான் அவருக்கு ஒரு யோசனை வந்து இருக்கு. அப்பா பொண்ணுக்கு பதிலா அக்கா பொண்ணு மாமா இடையே நடப்பது போல கதை இருந்தா நல்லா இருக்கும் என அப்போ தோணி இருக்கு. உடனே அதை எப்போ தெரியுமா மாத்தி இருக்காரு. டப்பிங் சமயத்துல மாத்தி இருக்காரு. அப்பா மாமா இரண்டுக்குமே ஒரே லிப் சிங்க் தான் வரும். அதனால் அப்படி கதையை மாத்திட்டாராம். அதை கேட்டு எனக்கு ஒரே ஷாக்கா போச்சு. நாம படத்துல பார்த்தது அந்த வர்ஷன் தான். அது எப்படி சார் அப்படி பண்ணீங்கன்னு கேட்டு நான் மிரண்டு போயிட்டேன்" என ஆர். சுந்தர்ராஜன் பார்த்து தான் வியந்த அந்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் நடிகர் மணிகண்டன்.
மேலும் படிக்க :