Ponniyin Selvan: PS1, PS2 ஆகிய இரண்டு பாகங்களையும் வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்.. தொகை எவ்வளவு தெரியுமா?
பொன்னியின் செல்வன் படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
பொன்னியின் செல்வன் படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே வைத்தது.
View this post on Instagram
இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டையும் பிரபல ஓடிடி நிறுவனம் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபல நிறுவனம் அமேசான் நிறுவனமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதே போல இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் ஒரு மிகப்பெரிய தொகைக்கு சன் டிவியால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.