Mangal Dhillon Death: கேன்சரால் உயிரிழந்த பழம்பெரும் பஞ்சாபி நடிகர் மங்கள் தில்லான்… ரசிகர்கள் இரங்கல்!
மங்கள் தில்லான் ஒரே நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றினார். அவர் 1986 ஆம் ஆண்டு புனியாத் என்ற சூப்பர் ஹிட் டிவி சீரியலில் லுபயா ராம் வேடத்தில் நடித்தார்.
ஜூனூன், புனியாத் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் மங்கள் தில்லான் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்தார்.
லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை
லூதியானா மருத்துவமனையில் சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, சில நாட்களுக்கு முன்பு மோசமாக மாறியது. தற்போது அவர் மறைந்த செய்தியை நடிகர் யஷ்பால் சர்மா ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார், “மங்கள் தில்லான் ஜி. ரெஸ்ட் இன் பீஸ் (RIP)." என்று அந்த பதிவில் எழுதியுள்ளார்.
சுக்பீர் சிங் பாதல் இரங்கல்
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் டிவிட்டரில், தனது இரங்கலைப் பகிர்ந்து கொண்டு ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “மிகப்பெரிய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் பஞ்சாபி திரையுலகின் தயாரிப்பாளர் திரு. மங்கள் தில்லானின் மறைவு பற்றி அறிந்து வருந்துகிறேன். இது இந்திய சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அவரது வசீகரிக்கும் குரல் மற்றும் நாடக காட்சிகளை இனி புதிதாக பார்க்க முடியாமல் பலரும் வாடுவார்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று எழுதினார்.
மங்கள் தில்லானின் திரைப்படங்கள்
பியார் கா தேவ்தா, ரன்பூமி, ஸ்வர்க் யஹான் நரக் யஹான், விஸ்வத்மா, தில் தேரா ஆஷிக், ட்ரைன் டு பாகிஸ்தான் ஆகியவை அவரது விரிவான திரை வாழ்க்கையில், முக்கியமான சில படங்கள். 2003 ஆம் ஆண்டு ஃபர்தீன் கான் நடித்த ஜனாஷீன் படத்திலும் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்கள் தில்லானின் டிவி சீரியல்கள்
மங்கள் தில்லான் ஒரே நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றினார். அவர் 1986 ஆம் ஆண்டு புனியாத் என்ற சூப்பர் ஹிட் டிவி சீரியலில் லுபயா ராம் வேடத்தில் நடித்தார். மேலும் 1988 ஆம் ஆண்டு வெளியான 'கூன் பாரி மாங்' திரைப்படத்தில் ரேகா நாயகியாக நடிக்க, இவர் நாயகனாக நடித்தார். அவர் இதற்கு முன் பல படங்களில் நடித்த அவர், 1993 இல் ஜூனூன் என்ற டிவி நாடகம் மூலம் மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார். அதில் அவர் சுமர் ராஜ்வன்ஷ் என்ற பாத்திரத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு தொலைக்காட்சி சீரியலான நூர்ஜஹானில், அக்பர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.