Malaika Arora: கல்யாணம் செய்ய இருந்த நிலையில் ப்ரேக் அப்.. அர்ஜூன் கபூர் - மலாய்க்கா அரோரா ஜோடிக்கு என்ன ஆச்சு?
மலாய்க்கா அரோரா மற்றும் அர்ஜூன் கபூர் இருவரும் தங்களது காதல் உறவை முடித்துக்கொண்டார்கள் என்கிற வதந்தி பரவிய நிலையில், தற்போது மேலும் ஒரு தகவல் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நடிகை மலாய்க்கா அரோரா மற்றும் நடிகர் அர்ஜூன் கபூர் தங்களது காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அர்ஜூன் கபூரின் குடும்பத்தினரை அன்ஃபாலோ செய்துள்ளார் மலாய்க்கா அரோரா.
அர்ஜூன் கபூர் - மலாய்க்கா ஜோடி
பிரபல தயாரிப்பாளர் போனி கபூர்-மோனா ஷோரி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். 2003ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வந்த இவர், 2 ஸ்டேட்ஸ், ஹாஃப் கேர்ள் பிரண்ட், குண்டாய் உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமன்றி, இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள படங்களிலும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார்.
இவரது காதலியான மலாய்க்கா அரோரா, ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்தவர். 1998ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அர்பாஸ் கானை கரம் பிடித்த இவர், 2017ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். மலாய்க்கா அரோராவும், அர்ஜூன் கபூரும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். சமீப காலமாக இவர்கள் இருவரும் தங்களது காதலை முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அன்ஃபாலோ
View this post on Instagram
இந்நிலையில் அர்ஜூன் கபூரின் குடும்பத்தினரான அன்ஷுலா கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் , போனி கபூர், அனில் கபூர் உள்ளிட்டோரின் இன்ஸ்டாகிராம் கணக்கை அன்ஃபாலோ செய்துள்ளார் மலாய்க்கா அரோரா.
மலாய்க்காவின் இந்த செயலை அவர்களில் காதல் முடிந்துவிட்டதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்துவரும் நிலையில், தற்போது மற்றொரு நிகழ்வு இந்த குழப்பங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வழக்கமாக அர்ஜூன் கபூரின் எந்த ஒரு புகைப்படத்திற்கும் ஏதாவது கமெண்ட் செய்யும் மலாய்க்கா அரோரா சமீபத்தில் அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்திற்கு எந்த கருத்தும் தெரிவிக்காதது சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பாலிவுட் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.