Malaika Arora: இணையத்தில் வைரலாகும் மலாய்கா அரோரா போஸ்ட்... அர்ஜுனுக்கு யெஸ் சொன்ன நடிகை!
மலாய்கா அரோரா - அர்ஜுன் கபூர் குறித்த வதந்திகளுக்கு முத்துப்புள்ளி வைத்த மலாய்காவின் லேட் இன்ஸ்டா போஸ்ட். இது தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட் முன்னணி நடிகை மலாய்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக ஒரு போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தான் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட் ஜோடிகளில் மிகவும் ட்ரெண்டிங் ஜோடிகளான மலாய்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் இடையிலான உறவு குறித்து பல கேள்விகள், வதந்திகள் பரவிய வண்ணமாக இருக்கும் நிலையில் தற்போது தனது பதிலை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார் நடிகை மலாய்கா அரோரா.
இன்ஸ்டா மூலம் உறுதிபடுத்திய மலாய்கா :
சமீபத்தில் மலாய்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் தங்களின் உறவை முறித்துக் கொண்டனர் என வதந்திகள் பரவி வந்த நிலையில் மலாய்கா அரோரா அர்ஜுன் கபூருக்கு 'நான் ஆம் என்று சொன்னேன் ' என பதிலளித்து கூடவே ஹார்ட் ஈமோஜிகளையும் தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட்டுள்ளார். ஷமிதா ஷெட்டி, புல்கித் சாம்ராட், மஹி விஜ் மற்றும் கரண் டேக்கர் உள்ளிட்டோர் இந்த பதிவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மலாய்கா அரோராவின் நண்பர்களின் இந்த வாழ்த்து செய்திகளால் இருவரின் நிச்சயதார்த்தம் குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
View this post on Instagram
எப்போது திருமணம் ?
மலாய்கா அரோரா - அர்ஜுன் கபூர் இருவரும் தங்களின் உறவை 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ஊடகம் வாயிலாக உறுதிப்படுத்தினார். அதனை தொடர்ந்து இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்தனர். அவ்வப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இடையில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டு பிரிந்ததாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் மலாய்கா அரோராவின் இந்த பதிலால் அவர்களின் உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இருப்பினும் இருவரும் தங்களின் நிச்சயம் மற்றும் திருமணம் குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram