மேலும் அறிய

Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!

Kamalhassan : நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் முன்னிலை வகித்து வரும் திமுக கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் நேற்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பாஜக, காங்கிரஸ் இடையே பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக,  நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அக்கட்சியினருக்கு கொடுத்துள்ளது. 

Kamalhassan: இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடிய வெற்றி.. முதலமைச்சரை ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்!

இப்படியான நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் "திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காக சிந்தித்து மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது. 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக 2019 மக்களவை தேர்தலில் தொடங்கி தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் அருமை நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியை குவித்து இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.இந்தியாவை காக்கும் போரில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து களம் கண்ட கூட்டணிக்கு கட்சியினருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.சிந்தாமல் சிதறாமல் சந்தேகமில்லாமல் நாம் பெற்று இருக்கும் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியவை.இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! " என குறிப்பிட்டு இருந்தார். 

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அக்கட்சிக்கு மாநிலங்களவை ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வென்ற நிலையில் நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget