மேலும் அறிய

Jayam Ravi birthday: ஜெயம் ரவி பர்த்டே ஸ்பெஷல்.. PS1 குழுவில் இருந்து வெளியான புது ஸ்டில்..

ஜெயம் ரவி 42 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஜெயம் ரவி 42 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய  42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், அதனை சிறப்பிக்கும் விதமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து அவரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, “ எல்லோரும் நன்றாக பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும்போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.

இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை. 

பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது. 
மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு  சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனானல் வீட்டில் திட்டு வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.

கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன்.விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி என்றார்.

முன்னதாக,கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடலின் மேக்கிங், ஐமேக்ஸ் திரை வடிவில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியானது என தொடர்ந்து ரசிகர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலே படக்குழு வைத்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.  

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget