Vijay Sethupathi: அவ்வளவு செட்கள்.. பலர் கற்பனைக்கு உருவம் கொடுத்தவர்.. ராமோஜி ராவைப் பற்றி சிலாகித்த விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: “புதுப்பேட்டை படத்துக்காக 2015ஆம் ஆண்டு அங்கு போகும்போது அவ்வளவு செட்கள், அவ்வளவு ஷூட்டிங் அங்கு நடந்துகொண்டிருந்தது. இதை ஒருத்தர் நம்பினார்” - விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) 50ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா (Maharaja) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகைகள் அபிராமி, மம்தா மோகன்தாஸ். திவ்ய பாரதி, நடிகர்கள் பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த், நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் குரங்கு பொம்மை, நிமிர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல கன்னட இசையமைப்பாளர்அஜனீஷ் லோகநாதன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்து சுவாரஸ்யத்தைக் கூட்டி ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது:
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் புதுப்பேட்டை ஷூட்டிங்
“ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ்வின் மறைவு எனக்கு வருத்தம். எனக்கு அவருடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், புதுப்பேட்டை படத்துக்காக 2015ஆம் ஆண்டு அங்க போகும்போது அவ்வளவு பெரிய இடம், அவ்வளவு செட்கள், அவ்வளவு ஷூட்டிங் அங்கு நடந்துகொண்டிருந்தது. இதை ஒருத்தர் நம்பினார். கற்பனை பண்ணியிருக்கார். சின்ன சின்ன பொருள்கள் முதல் அத்தனையும் இருந்தது.
அது எனக்கு ரொம்ப ஆச்சர்யம். செல்வா சாரும், தனுஷூம் கிரிக்கெட் விளையாடும்போது கூப்பிட்டிருக்கிறார்கள். அங்கு நாங்கள் விளையாடியிருக்கிறோம். வரலாறு பட ஷூட்டிங்கின்போது அஜித் சாரை தூரமாக நின்று பார்த்திருக்கிறோம். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு. நிறைய பேரின் கற்பனைக்கு உருவம் கொடுத்த மனிதர். அவருக்குத் தலை வணங்குகிறேன்” எனப் பேசினார்.
நேற்று அதிகாலை ஈ நாடு ஊடக நிறுவனரும், ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனருமான ராமோஜி ராவ் தன் 87ஆவது வயதில் காலமான நிலையில், இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் என பெரும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தொடங்கி பலரும் அவருக்கு நேற்று முதல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ராமோஜி ராவின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செய்தார்.
மேலும் படிக்க: Premji Amaran: காதல் கனவே.. மனைவிக்கு முத்தம்.. திருத்தணியில் சிம்பிளாக நடந்த நடிகர் பிரேம்ஜி திருமணம்..
Good Bad Ugly: "உங்கள் அர்ப்பணிப்பை கண்டு வியக்கிறேன்" - நடிகர் அஜித்தைப் பாராட்டிய இயக்குனர் ஆதிக்!