Viruman: யூடியூபில் வெளியானது மதுரைவீரன் பாடல்..! நடிகர் கார்த்தி ட்வீட்.
மதுரைவீரன் என்ற இந்த பாடல் மாபெரும் ஹிட் ஆனது. ரிபீட் மோடில் அனைவரும் இந்த பாடலை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ யூடியூபில் வெளியானது.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவர் முத்தையா. முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விருமன். பருத்திவீரன் ஸ்டைலில் கிராமத்து கதைக் களத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகும் முன்பே பாடல்கள் வெளியாகி மெகா ஹிட்டாக்கிவிட்டது. அதிலும் கஞ்சா பூ கண்ணால், மதுரை வீரன் பாடல்கள் வேற லெவல் ஹிட்.
அதிதி சங்கர் ஒரு எம்.பி.பி.எஸ் பட்டதாரி. நடிப்பின் மீது அதீத காதல் கொண்ட அதிதி இந்த படம் மூலம் திரையுலகில் நுழைந்துள்ளார். டான்ஸ், பாடல் என அனைத்திலும் கலக்கி உள்ள அதிதி, இந்த திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். மதுரை வீரன் என்ற இந்த பாடல் மாபெரும் ஹிட் ஆனது.ரிபீட் மோடில் அனைவரும் இந்த பாடலை கேட்டு வருகின்றனர். அவரது குரல் மூலைமுடுக்கெல்லாம் முணுமுணுத்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ யூடியூபில் வெளியானது. நடிகர் கார்த்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான லிங்கையும் அவரது பதிவிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
#MaduraVeeran, a lovely duet song for me after quite a while. Was so happy to see such a good response in theatres. Here’s the video for you all.https://t.co/gXb5hJpiXF
— Actor Karthi (@Karthi_Offl) August 19, 2022
மதுரை வீரன் பாடல் குறித்த சர்ச்சை !
மதுரை வீரன் பாடல் குறித்த சர்ச்சையும் முன்பு எழுந்தது. யுவன் இசையில் விருமன் திரைப்படத்தில் "மதுர வீரன்" என்ற டூயட் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து பாடியுள்ளார் அதிதி சங்கர் . ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி என்றும், அவரது குரலை நீக்கிவிட்டு மீண்டும் அதிதி வைத்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்து யுவன் வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜலட்சுமி, மதுரை வீரன் பாட்டை நான் பாடினது உண்மை தான். ஆனால அதிதி நல்லா பாடுறதுல்ல அவங்க பாட வச்சிருக்காங்க. சினிமாவில் இது சகஜமான விஷயம். ஆனால் எனக்கு நியாயம் கேட்பதா நினைச்சிட்டு தொடர்ந்து அதிதியை விமர்சிக்கிறது வருத்தமா இருக்கு என தெரிவித்தார். இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்