மேலும் அறிய

Rowdy Baby Surya: ரவுடி பேபி சூர்யாவின் வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்... வழக்கு ஒத்திவைப்பு!

ரவுடி பேபி சூர்யாவின் வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பிரபல டிக் டாக் ஆப்பில் ரவுடி பேபி எனும் பெயரில் இயங்கி பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த சூர்யா (வயது 35).

இவர் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திலகா மற்றும் அவரது கணவர் முத்து ஆகிய யூடியூபர்கள் குறித்து தகாத முறையில் பேசி வீடியோ பகிர்ந்துள்ளார். சுப்பு லட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா ஆபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவக்கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் திலகா முன்னதாக புகார் அளித்தார்.

இதனையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் தங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா (35), அவரது நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கா (48) ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4 ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிறையில் உள்ள சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மதுரையில் வைத்து கோவை காவல்துறையினர் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த சிக்கந்தர் என்கிற சீக்கா ஆகியோரையும் கடந்த ஜனவரி 4ம் தேதி கைது செய்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி முதல் குண்டர் சட்டத்தில் இருந்துவரும் இருவரும் காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ரவுடி பேபி சூர்யா பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்து அவர்கள் முன்பு லேப்டாப் மூலம் இருவரது டிக் டாக் காட்சிகளையும் காண்பித்தார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கினை ஆறு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். இதனால் மேலும் 6 வாரங்கள் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு..ராதிகா சரத்குமார் பாராட்டு
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு..ராதிகா சரத்குமார் பாராட்டு
திருமண கொண்டாட்டம் முடிந்ததும் அடுத்த ப்ளான்..ராஷ்மிகாவை வெட்கப்பட வைத்த விஜய் தேவரகொண்டா
திருமண கொண்டாட்டம் முடிந்ததும் அடுத்த ப்ளான்..ராஷ்மிகாவை வெட்கப்பட வைத்த விஜய் தேவரகொண்டா
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Parijatham: பதறியடித்து ஓடி வந்த கணவன்.. ஹாயா வேர்க்கடலை சாப்பிட்ட மனைவி - பாரிஜாதத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை அசிங்கப்படுத்திய மக்கள்.. மாமியாருக்காக களமிறங்கிய மாப்பிள்ளை - கார்த்திகை தீபத்தில் இன்று!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Embed widget