Maaveeran: சூப்பர் ஸ்டாரும் இல்லை.. உலகநாயகனும் இல்லை.... மாவீரன் படத்தில் இணைந்த உச்ச நட்சத்திரம் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
மண்டேலா படம் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின். இந்த படத்திற்கு தேசிய விருதினையும் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரது இரண்டாவது படமான மாவீரன் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டவுள்ளார் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கு பலர் தளபதி படத்தில் வரும் ரஜினியின் லுக் போல் உள்ளது என கூறினர். பார்ப்பதற்கும் அப்படித்தான் காணப்பட்டார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே மிஷ்கின் சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் கிடையாது, ரஜினியே தான் என கூறினார். இதையடுத்து படத்தின் பாடல்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால், தமிழ் சினிமாவின் டாப் ஹூரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உருவாகியுள்ளார். தெலுங்கிலும் தனது வியாபாரத்தை பெருக்க முயற்சித்த சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் படுதோல்வி அடைந்தார். பிரின்ஸ் படம் 5 நாட்கள் கூட பெரும்பாலான தியேட்டர்களில் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாழ்க்கையில் சரியான அடியாக அமைந்து விட்டது.
இந்நிலையில் தான் மாவீரன் படத்தின் அப்டேட்டுகள் வந்தவாறு இருந்தது. மேலும், அது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் ஒருவித பாசிடிவ் ரெஷ்பான்ஸ் கிடைக்க, படக்குழு குஷியாகிப் போனது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று அதாவது நேற்று மூன்றாவது பாடல் வெளியானது
ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு, மடோனா அஸ்வின் ஏற்கனவே தனது முதல் படத்தில் சமூக பொறுப்பு மிக்க கதைக்களத்தினை கையாண்டார். மாவீரன் படமும் சமூக பொறுப்பு மிக்க படமாக இருக்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அது படத்தில் ஒருவர் குரல் பின்னணி (வாய்ஸ் ஓவர்) பேசுவது போன்று காட்சிகள் இருப்பதாகவும், அதற்கு படக்குழு சூப்பர் ஸ்டார் மற்றும் கமல் ஹாசனை நாடியுள்ளது. இருவரும் ’நோ’ சொல்லியதாகவும், இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் சூர்யா இருவரில் ஒருவர் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை துவங்கும் போது மிகவும் உறுதுணையாக இருந்த தனுஷ் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.